உலக கோப்பை 2023 தொடர்நது சமீபத்தில் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியா 4 முறை தொடர்ந்து போட்டியில் வென்று முதல் இடத்தில் இருக்கும்.

இந்நிலையில் கடந்த 2011 உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே இந்த உலக கோப்பையில் விளையாடுகின்றனர். இது ஒரு அற்புதமான சாதனை என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒரு பந்துவீச்சாளராக இதனை ஆண்டுகள் இந்திய அணியில் நிலைத்திருப்பது என்பது கடினமான ஒரு விஷயம். இந்நிலையில் இந்த உலக கோப்பை போட்டியில் தொடக்க ஆட்டத்தில் மட்டுமே அஸ்வின் விளையாடினார்.
அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நாளை நடக்க இருக்கும் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மாம்ரே. அவர் கூறுகையில் “இது மிகவும் கடினமான ஒன்று. உங்களிடம் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அணியில் இருக்கும்போது, உங்களால் அவருக்கு ஒரு ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் சில சூழ்நிலைகளில் அந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

நாங்கள் அணிக்கு என்ன தேவையோ அதனை செய்கிறோம், அதை குறித்து பேசுகிறோம். இந்த ஆட்டத்திற்கு முன்பு மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக மைதானம் எப்படி இருந்தது என்பதை பொறுத்து அனைத்து முடிவுகளும் அணியை அடிப்படையாகக் கொண்டவை. நாங்கள் அந்த சூழ்நிலைக்கு தகுந்த மற்றும் சிறந்த கலவையுடன் செல்கிறோம் அதைப் அவர் புரிந்துகொள்கிறார்.
அவர் ஒரு சிறந்த அணி வீரர். நான் அவரை எரிச்சலாக பார்த்ததில்லை, கடந்த சில வருடங்களாக அவர் எப்பொழுதும் குறை கூறி பார்த்ததில்லை, அவர் எங்களுடன் இருக்கிறார். அத்தகைய ஒருவரைக் கொண்டிருப்பது உண்மையில் உதவுகிறது. மேலும் அவருக்கு பெருமை சேரும் என்று நினைக்கிறேன்.
View this post on Instagram
பல வருடங்களுக்குப் பிறகும் அவர் அங்கு இருக்கிறார், அவர் அணிக்கு நன்றாகச் செய்ய விரும்புகிறார், அவர் ஒவ்வொரு பயிற்சியிலும் கடுமையாக உழைக்கிறார். அவர் தொடர்ந்து பந்துவீசுகிறார். அவர் ஒரு சிறந்த அணி வீரர் என்று கூறினார் இந்திய அணியின் பயிற்சியாளர் மாம்ப்ரே. இவர் சொல்வதை வைத்து பார்க்கையில் இந்தியா தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதினால் பெரிதாக எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாது என்பது தெரிகிறது.




