உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் மோதினர். இந்திய அணி இதுவரை நடந்து வந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

ஆனால் இங்கிலாந்து அணியும் நடைபெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி மற்ற அனைத்து போட்டிகளிலும் பெரும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலக கோப்பையில் முதன் முதலாக இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. அது அவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே அடித்தது.
230 என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியா அணி முதலில் பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்றாலும் பின் பந்து வீச்சு அபாரமாக செயல்பட்டனர். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக லிவிங்க்ஸ்டன் 27 ரன்னும் டேவிட் மலான் பதினாறு இரண்டும் வில்லி 16 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர்.
இதன் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்யை குல்தீப் யாதவ் அற்புதமாக வீழ்த்தினார். அது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது. இந்த நிலையில் தான் முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் பால் காலிங்வுட் குல்தீப் யாதவின் பந்துவீச்சு குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ” இந்தியா இங்கிலாந்தின் முதல் விக்கெட்டைப் பெற்றவுடன் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூட கண்டுபிடிக்க இந்தியா விடவில்லை. அதன் பிறகு, ஆடுகளத்திற்கு வெளியே நாம் நகர்வதைப் பற்றிய துல்லியம், திறமை நிலை பற்றி நான் நினைத்தேன். மேலும் ஸ்பின்னர்களை அவர்கள் கொண்டு வந்து விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று நினைத்தேன். அங்கு பனி இல்லை, அப்போது குல்தீப் யாதவ் ஜோஸ் பட்லரை விக்கெட் எடுத்த பந்து இந்த தொடரிலேயே சிறந்த பந்து என நினைக்கிறேன் என்றார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. நீங்கள் அதனை பார்த்தீர்கள் என்றால் என்ன நடக்கிறது என்பதை நம்ப முடியாமல் நிற்பீர்கள். இந்திய பந்துவீச்சாளர்களை பற்றி கூறும்போது, அவர்கள் முற்றிலும் இடைவிடாமல் நெருக்கடி கொடுத்தனர், அந்த முதல் விக்கெட்டைப் பெற்றவுடன் லைனிலும் லெந்திலும் சரியாக பந்துவீசி அற்புதமாக விளையாடினார்கள். மேலும் டிவியில் கூட்டத்தை நீங்கள் கேட்கும்போது 12வது வீரர் வந்தது போன்று அங்கு ஒரு அற்புதமான சூழ்நிலை உள்ளது என்றார் பால் காலிங்வுட்.



