உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் மோதினர். இந்திய அணி இதுவரை நடந்து வந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இங்கிலாந்து அணியும் நடைபெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி மற்ற அனைத்து போட்டிகளிலும் பெரும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இன்றைய போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலக கோப்பையில் முதன் முதலாக இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. அது அவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே அடித்தது.
இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்த வேகத்திலேயே வீரர்கள் அவுட் ஆகி சென்று கொண்டு இருந்தார்கள். இந்திய அணியின் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும் சூரியகுமார் யாதவ் 49 ரன்களும் கே.எல்.ராகுல் 39 ரன்கள் அடித்திருந்தனர். இங்கிலாந்தின் சார்பில் வில்லி மூன்று விக்கெட்டுகளையும் வோக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வூட் ஒரு விக்கெட்டையும் வைத்திருந்தார்.

230 என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியா அணி முதலில் பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்றாலும் பின் பந்து வீச்சு அபாரமாக செயல்பட்டனர். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக லிவிங்க்ஸ்டன் 27 ரன்னும் டேவிட் மலான் பதினாறு இரண்டும் வில்லி 16 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர். எனவே இங்கிலாந்து அணி இந்தியாவிடம் மாபெரும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியஅணி கிட்ட தட்ட அரை இறுதி போட்டிக்கு தகுதி ஆகிவிட்டது. மேலும் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
ற்று போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதில் சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். பேசிய இந்திய அணியின் பந்து பேச்சுப் பயிற்சியாளர் பராஸ் mமாம்ரே கூறுகையில் அணியில் உங்களுக்கு சமி போன்ற திறமையான வீரர்கள் இருக்கும்பொழுது அவர்களைக் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இவர்கள் அனைவரும் போதுமான அளவுக்கு கிரிக்கெட்ட விளையாடிய அணிக்கு எவ்வளவு தேவை என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். இது குறித்து குழு விவாதம் நடத்தினோம் என்று வேண்டுமானாலும் கூறலாம்.

பந்து வீச்சாளர்கள் தரம் அவர்கள் செய்யும் திறமை இதனால் எங்களுடைய வேலை இந்திய அணியில் எளிதான ஒன்றாக இருந்து வருகிறது. இவர்கள் போதுமான அளவுக்கு போட்டிகளை விளையாடி இருப்பார்கள். மைதானத்திற்குள் இவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். நான் சமி பும்பராவிடம் என்ன மாதிரியான திட்டம் என்பதுதான் பற்றி பேசுவோம். அவர்களிடம் டெக்னிக்கலாக நான் பேசமாட்டேன். அத்தகைய திட்டங்களை மைதானத்தில் சிறப்பாக செயல்படுத்த அவர்களுக்குத்தான் பாராட்டு போய் சேர வேண்டும். என்றும் அவர் கூறியிருந்தார்.



