உலக கோப்பை 2023 தொடரானது முதல் முறையாக இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய மைதானங்கள் இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமாறே கண்டிப்பாக அமைக்கப்படும். குறிப்பாக சுழற்பந்து வீச்சிற்கு ஈடுபடுமாறே மைதானங்கள் இருக்கும் என்று கூறப்படுவதால் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் யார் களமிறங்க போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணிக்கு குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், ஜடேஜா மற்றும் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இருபத்தினால் பிரதான சுழற்பந்து வீச்சாளராக யார் இருப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் உலக கோப்பையில் சாஹல் மற்றும் அக்சர் படேல் வரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இந்தியா இபப்டி செய்யும் போது உலக கோப்பையில் தரமான ஆஃப் ஸ்பின்னரை மிஸ் செய்யும். இப்படிப்பட்ட நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளரானா அஸ்வின் உலக கோப்பை போட்டியில் விளையாடுவார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் தான் அதற்கு பதிலாளித்துளார் அஸ்வின்.
அவர் இது குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கையில் “நான் அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால் அணி தேர்வு எனது வேலை அல்ல.”என் கையில் இல்லாத விஷயங்களைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தேன். நான் நேர்மையாக வாழ்க்கை மற்றும் எனது கிரிக்கெட்டில் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் எனது சிந்தனை செயல்முறையிலிருந்து எதிர்மறையான விஷயங்களை விலக்கி வைக்க முயற்சி செய்கிறேன்.

நான் அந்தந்த நாளை எடுத்துக்கொண்டு வாழ முயற்சி செய்கிறேன். முடிக்கப்படாத வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் நான் விளையாடாவிட்டாலும், இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்வதைப் பார்க்க நான் விரும்புகிறேன் என்பது உண்மைதான் என்றார் அஸ்வின்.
மேலும் பேசிய அஸ்வின் பேசுகையில் கடந்த காலத்தில் ஓய்வு பெற நினைத்ததாக கூறினார். அவர் கூறியதாவது “நான் காயம் காரணமாக ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. என்னுடைய உடலில் நிபுணன் இல்லாததால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் என் தொழிலைச் சுற்றி சில நிச்சயமற்ற தன்மை இருந்தது, நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர்மறையாகச் சிந்திப்பது மிகவும் எளிது, அதிலிருந்து மீண்டு வர முடியாது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டம் அது. அது ஒரு எண்ணம் மட்டுமே தான் அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் இப்போது, நான் நன்றாக பந்துவீசுவதாகவும், பேட்டிங் செய்வதாகவும் உணர்கிறேன். மேலும் எனது வாழ்க்கையில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது.
கோவிட் காலத்தில் அபோது இருந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு கிரிக்கெட் விளையாடுவது 3 ஆண்டுகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இதுவே எனக்கு கிடைத்த உண்மையான இடைவெளி, மேலும் நான் வீட்டில் இருக்க விரும்புகிறேன், இன்னும் கொஞ்சம் கிளப் கிரிக்கெட் விளையாடுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்து டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா தொடர் என்று கூறினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.



