அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது தொடங்க இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. குறிப்பாக விராட் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு 2 வாரம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் முதல் வாய்ப்பை தவறவிட்ட சஞ்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது போட்டியில் அற்புதமான அரை சதம் அடித்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த டி20 தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முக்கியமான நேரத்தில் சொதப்பினார் சஞ்சு சாம்சன். இந்த நிலையில் தான் உலக கோப்பை னையில் விக்கெட் கீப்பர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அதில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பெட்ரி பேசியுள்ளார் அஸ்வின்.
அவர் கூறியதாவது “சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்த போது அரைசதம் அடித்தார். மேலும் கலத்தில் இறங்கியவுடனேயே அவர் சுழற்பந்து வீச்சர்களை தாக்க ஆரம்பித்தார். மேலும் டி20 போட்டியில் 12 ரன்களில் 12 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் அவருக்கு இடம் கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் அவர் மூன்று அல்லது நான்காவது இடத்தில் களமிறங்குகிறார். அவர் ODIகளில் மிகச் சிறந்த பேட்டிங்கிங்கை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 3 மற்றும் 4 வது இடத்தில் இன்னமும் கலியாகவில்லை . சஞ்சுவின் திறமையைக் கருத்தில் கொண்டு அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தியாவுக்கு என்று வரும்போது சஞ்சுவிடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் பங்கு வேறு. டாப் 4-ல் அவருக்கு இடம் இல்லை. உலகக் கோப்பைக்குப் பிறகு அவருக்கு இடம் கிடைக்குமா அல்லது உலகக் கோப்பைக்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு இடம் கிடைக்குமா? என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் விராட் 3வது இடத்தில் ஃபிக்ஸ் ஆகியுள்ளார். ரோஹித் மற்றும் கில் ஆகியோரும் ஓப்பனர்களாக ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல் இருவரும் உடல்தகுதியுடன் இருக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே தற்காப்பிற்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. அதற்கு கேஎல் அல்லது ஸ்ரேயாஸில் இவர்கள் தயாராக இல்லை என்றார் நமக்கு 4 அல்லது 5 இல் பேக்அப் தேவை.
ஆனால் ஐபிஎல்லில் சஞ்சு சஞ்ச்ம அந்த ரோலை செய்யவில்லை, அவர் ODIகளில் மட்டுமே அந்த ரோலில் களமிறங்குகிறார். மேலும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியிலும் சஞ்சு சாம்சன் 50 ரன்கள் எடுத்துள்ளார். அது அவருக்கும் இந்திய அணிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. ஒருநாளை உலகக் கோப்பையை போட்டியை பொருத்தவரையில் சஞ்சு சாம்சன் அதற்கு சரியான தீர்வாக இருப்பார், மறுபுறம் திலக் வர்மா கிட்டத்தட்ட உலக கோப்பை அணியில் இடம்பெற்று விட்டார் என்றார் அஸ்வின்.



