அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணியானது மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது பந்துவீசிய தேர்வு செய்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ 33 ரன்களில் ஆட்டமிழக்க டேவிட் மாலன் 14 ரன்கள் அவுட்டாக்கினார். பின்னர் ஹாரி ப்ரூக் 15 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில் அனுபவ வீரரான மொயின் அலி 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியானது சரிவை சந்தித்தது. இருந்த போதிலும் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (42) ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் அதிரடி வீரரான லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும் ஜோ ரூட் 77 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் அந்த பேட்ஸ்மேன்கள் பெரிதும் எதுவும் செய்யாத நிலையில் இங்கிலாந்து அணியானது ஆழவுட்டிலிருந்து தன்னை காத்துகொண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டேவின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோரின் ஆற்புதமான பேட்டிங்கின் மூலம் நியூசிலாந்து உலக கோப்பை 2023 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரச்சின் ரவீந்திரா.தன்னுடய செயல்பாடு குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “இதுபோன்ற ஒரு நாள் அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதோடு நல்ல ஃபீல்டிங் இருந்ததால் நாங்கள் இங்கிலாந்து அணியை 280 ரன்களில் சுருட்டினோம். நல்ல வேலையாக நான் பேட்டிங் செய்ய வரும்போது டேவான் கான்வே களத்தில் என்னுடன் இருந்தார். அவர் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை எனக்கு காண்பித்தார்.

டேவான் கான்வே எனக்கு நல்ல நெருக்கம் உடையவர். கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எப்படிப்பட்ட வீரராக வருவார் என்பது நமக்குத் தெரியும். அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். இந்த போட்டியில் நான் விளையாடுவேன் என்று போட்டிக்கு முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு சிறப்பான ஒன்று என்று கூறினார் ரச்சின் ரவீந்திரா.



