இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது பாரபடாஸ் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனாக ஹேர்த்திக் பாண்டியா வர ரோஹித் ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்தியா நினைத்தது போன்று போட்டியானது செல்லவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மிகவும் சிறப்பாக செயல்பாடு இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனால் இந்தியாவினால் 181 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்த நிலையில் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களை தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்தினால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தோல்வி குறித்து பேசியிருந்தார்.
ராகுல் டிராவிட் கூறியது :
அவர் கூறுகையில் “இது எங்களுக்கு வீரர்களை பரிசோதித்து பார்க்க கடைசி வாய்ப்பு, எங்களுடைய சில வீரர்கள் காயம் அடைந்து NCAவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சில மாதங்கள் மட்டுமே உலக கோப்பைக்கு காலம் இருக்கிறது, ஆசிய கோப்பை போட்டியும் வர இருக்கிறது. எனவே நேரம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது இதில் சில வீரர்கள் ஆசிய கோப்பைக்கும், உலக கோப்பைக்கும் தயாராக இருப்பார்கள் என்று.

எங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நான் நாங்கள் சரியாக பயன்படுத்தி சில வீரர்களை பரிசோதிப்பதன் மூலம் மோசமான சூழ்நிலையில் அவர்களது பயன்படுத்தி கொள்ளலாம். நாங்கள் எப்போதும் ஒரு போட்டி அல்லது ஒரு தொடரில் அவர்களின் செயல்திறனை பார்த்து முடிவு செய்யமாட்டோம். உலக கோப்பை போட்டிக்கும், ஆசிய கோப்பை போட்டிக்கும் இன்னமும் சில போட்டிகள் மட்டுமே இருக்கிறது.
எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இது போன்ற போட்டிகளில் விளையாடுவது எந்த பதிலையும் கொடுக்காது. நாங்கள் மற்றவர்கள் சொல்வதை பற்றி யோசிப்பதில்லை. எங்களுக்கு தெரியும் இங்குள்ள அனைத்து வீரக்ளும் கடுமையான முயற்சிக்கு பின்னரே இந்த இடத்திற்க்கு வந்துள்ளனர். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பயன்படுத்தி கொண்டு சரியாக செயல்படுவது அவர்களின் கையில் தான் இருக்கிறது.
எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான், எங்களுக்கு தெரியும் இங்கு விக்கெட்டை எடுத்து விடலாம் ஆனால் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம் என்று. ஆனால் நாங்கள் ஒருவேலை 230-240 ரன்கள் அடித்திருந்தோம் என்றால் அது நல்ல ஸ்கொராக இருந்திருக்கும் போட்டியையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் ராகுல் டிராவிட்.



