அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் ஒருநாள் உலக கோப்பை 2023 தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தொடக்கப் போட்டி அக்டோபர் 8, ஞாயிற்றுக்கிழமை, சென்னை நகரில் ஐந்து முறை சாம்பியன்களான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க இருக்கிறது. இந்த சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ‘மென் இன் ப்ளூ’ தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வி குறித்து கேட்கப்பட்டார்.

சாச்சின் டெண்டுல்கர், கங்குலி மற்றும் வீரேந்திர செவாக் போன்ற புகழ்பெற்ற வீரர்களையும் இந்திய அணியின் வீரர்களையும், யுவராஜ் சிங், தோனி போன்ற திறமையான இளைஞர்களையும் கொண்ட இந்திய அணியானது பங்களாதேஷுக்கு எதிர்பாராத தோல்வியுடன் கடந்த 2007 உலக கோப்பையை தொடங்கியது. பெர்முடாவுக்கு எதிராக டிராவிட் மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணியானது பெரிய வெற்றியைப் பெற்றனர்.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்கு ஏற்பட்ட இழப்பு இந்திய அணியை லீக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றத்தை ஏற்படுத்தியது, இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் அப்போது வைக்காப்பட்டது. இப்போது, டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் அனைவரும் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஐ.சி.சி போட்டியில் வெற்றிபெறாமல் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையை முடிக்க இந்தியாவுக்கு உதவ உள்ளனர்.

இருப்பினும், 2007 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையில் தனது தலைமையின் கீழ் இந்திய அணியின் மறக்கமுடியாத தோல்வியை குறித்து 50 வயதான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிடம் கேட்கப்பட்டது. இக்கட்டான கேள்விகளுக்கு தனது நகைச்சுவையான பதில்களுக்காக அறியப்பட்ட டிராவிட் இந்த கேள்வியையும் திசைமாற்றி தற்போது நடந்துவரும் 2023 உலக கோப்பைக்கு திருப்பினார்.
இது குறித்து அவர் பேசுகையில் “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து நீண்ட நேரம் ஆகிறது. உங்களுடன் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சென்னால் நான் உண்மையில் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் வீரர் என்பதை கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். அதிலிருந்து நான் நகர்ந்துள்ளேன். என்னை இனி ஒரு வீரராக நான் நினைக்கவில்லை. இந்திய அணியின் குழுவால் தங்களால் இயன்றதைச் செய்ய உதவுவதில் நான் கவனம் செலுத்துகிறேன் என்றார் டிராவிட்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அதாவது இறுதியில் பயிற்சியாளரின் வேலை மற்றும் ஊழியர்களின் வேலை என்பது உண்மையில் கேப்டனின் செயல்பாடுகளை ஆதரிப்பதும் அணியை வழிநடத்த உதவுவதும் தான், அடுத்த இரண்டு மாதங்களில் அவரது தேவைகளை நிறைவேற்ற உதவுவதும் தான். நாங்கள் அதை நன்றக் செய்ய முடியும் என்று கூறினார் ட்ராவிட்.




