
WTC சொதப்பிய இந்தியா :
மேலும் தொடக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுலுக்கு ஐபிஎல் போட்டியின் போது காயம் ஏற்படுத்தினால் அவரினால் சாம்பியன் ட்ராபியில் விளையாட முடியாமல் போனது. இதனால் ரோஹித் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் சொதப்பியதை அனைவரும் பார்த்தோம். ஆனால் இந்த போட்டிகளை வைத்து மட்டுமே இந்திய அணியை எடைபோட முடியாது. எனவே 2023 உலகக்கோப்பை போட்டியிடும் இவர்களே களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்த இரண்டு மடங்காக இருக்கும் அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது அப்போது மட்டுமே தெரியும். இப்படிப்பட்ட நிலையில் இந்த விஷயத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் அணியின் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி.ரவி சாஸ்திரி கூறுகையில் “இல்லை அது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். நீங்கள் உலக கோப்பை போட்டியை உற்று நோக்கி கவனித்தால் ஃபார்ம் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்று தெரியும்.

உங்களுடைய அணி இப்படி ஒரு கடினமான போட்டியில் விளையாடும் போது அணியின் சமநிலை சரியாக இருக்க வேண்டும். இடது கை பேட்டார்கள் மேல் வரிசையில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து கிடையாது. ஆனால் குறைந்தது முதல் 6 பேட்ஸ்மேன்களில் 2 இடது கை பேட்டார்கள் இருப்பதுதான் சமநிலை என்று நினைக்கிறேன் என்றார் ரவி சாஸ்திரி.
வலது கை பீட்டரின் முக்கியத்துவம் :
மேலும் கடந்த 2011 மற்றும் 1983 உலக கோப்பையில் இருந்த பேட்டரிகள் வரியை பற்றி பேசிய அவர் கூறுகையில் “இடது கை பேட்டார்கள் கடந்த 2011ஆம் ஆண்டு சிறப்பாக பங்களிப்பை கொடுத்தார்கள். நம்மிடம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற திறமையாக இடது கை பேட்டார்கள் இருந்தார்கள். அதே போல 1974 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் ஆல்வின் கல்லிச்சரன், பிரெடெரிக்ஸ், லாயிட் போன்றவர்களும் இருந்தார்கள்.

1983ஆம் உலக கோப்பையில் மட்டும்தான் பெரிதாக இடது கை பேட்டார்கள் இல்லை. ஆனால் அந்த தொடர் முழுவதுமே நமக்கு எதிராக பல விஷியங்கள் நடந்தது. 1987ல் ஆஸ்திரேலிய 2 மற்றும் 3 வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். 1996ல் மீண்டும் இலங்கை அணியின் ஜெயசூரிய, ரணதுங்க, குருசின்ஹ போன்றோர் நிரூபித்தார்கள். ஆஸ்திரேலியாவில் மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர்கள் இருந்தார்கள் என்று இடது கை பேட்ஸ்மேன்களின் முக்கியத்துவம் குறித்து ரவி சாஸ்திரி நீண்ட வரிசையை கூறினார்.




