ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். அந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் செய்ய விரும்பியது.

அதன் படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் 58 இடங்களில் முஜீப் 28 ரன்களையும் எடுத்து இருந்தனர். மேலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அதிகபட்சமாக ரஹ்மான், ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகளும் முகமது நபி இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியும் வெற்றி வாய்ப்பு தேடி தந்தனர்
இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு இது ஒரு எளிதான இலக்கு என்று தான் நினைத்து இருந்த நிலையில் 285 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்களும் டேவிட் மலான் 32 ரன்களும் ஆதில் ரஷித் 22 ரன்களும் அடித்திருந்தார்கள். இது அவர்களுக்கு பெருத்த அடியாக இருந்தது மேலும் பந்துவீச்சாளர்கள் ஆதில் ரஷீத் மூன்று விக்கெட்டுகளும் மார்க் வூட் இரண்டு விக்கெட் களும் லிவிங்ஸ்டன் ரூட் மற்றும் டோப்லி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணிகள் எளிதாக வென்றது.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல் பட்டு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பிக்கும் முன்பு வரை யாரும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் பேட்டிங் மற்றும் பௌலிங்ளும் ஆப்கனிஸ்தான் அணி சிறப்பாகவே செயல் பட்டு வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது.
Salute you AFGHANISTAN 🇦🇫. You have pulled offff the biggest upset in WC cricket. If not in the history of the game. Respect. @rashidkhan_19 @Mujeeb_R88 #CWC2023 #ENGvsAFG pic.twitter.com/o59wpS6Sxc
— Ravi Shastri (@RaviShastriOfc) October 15, 2023
ரவி சாஸ்திரி கூறியது:
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் “உங்களுக்கு சல்யூட் ஆப்கானிஸ்தான். நீங்கள் இந்த கிரிக்கெட் வரலாற்றில் இல்லாமல் உலக கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அப்செட் ஒன்றை செய்த காட்டியுள்ளீர்கள். உங்களுக்கு என்னுடைய மரியாதை என்று குறிப்பிட்டு x தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்



