உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

ரவி சாஸ்திரி கூறியது:
இது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கு எதிராக அப்ரிடி சிறந்த பவுலிங் சவாலாக இருக்கப் போகிறார். இதில் யார் வெல்லப் போகிறார்களோ அவர்களுக்குத்தான் ஆட்டம் சாதகமாக அமையும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணிவுடன் தொடர்ந்து விளையாடி இருக்கின்றோம். ஆனால் இப்போதே சூழல் வேற அப்பொழுதே சூழல் வேறு.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் அதனால் சொந்த மண்ணில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் அப்ரிடி விளையாடிய இரண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் அவர் வரும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் தான் எடுத்திருக்கின்றார் எனவே இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

அப்ரிடிக்கு எதிராக இந்திய அணியின் புள்ளிவிவரம்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மா கோலி மற்றும் கே எல் ராகுல் மூவரின் மூவரின் விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பயத்தை காட்டி இருக்கின்றார் அதேபோல் ஆசிய உலகக் கோப்பை போட்டியிலும் ரோகித் சர்மா மற்றும் கோலியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கின்றார். அப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி வெறும் 18.5 ஆகவே இருக்கின்றது. அதேபோல் கில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு முறை அவரது விக்கெட் அப்ரிடி எடுத்து இருக்கின்றார்.



