பொதுவாக கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்கள் கிடைப்பது அறிது. அப்படி கிடைத்தாலும் அவர்கள் ஆள் ரவுண்டர்களாகவும் பந்துகளை பறக்கவிடம் அதிரடி வீரர்களாகவும் இருப்பது மிகவும் அறிது. அப்படி ஒரு அணிக்கு திறமையான இடது கை பேட்ஸ்மேன் கிடைக்கும் பட்சத்தில் அந்த அணி மிகவும் திறமையாக செயல்படும். ஏனென்றால் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது மிகவும் கடினமான ஒன்று
மேலும் அந்த பேட்ஸ்மேன்கள் வலது கை பேட்ஸ்மேன்களுடன் இணைந்து மாறிக்கொண்டே இருப்பதினால் பந்துவீச்சாளரின் கவனம் சிதறும் தவறான லெந்தில் பந்துகளை அவர்கள் வீசுவார்கள். அதனால் தான் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பவர்கள் மிகவும் முக்கியமான நபர்களாக இருக்கின்றனர். அப்படிபட்ட நிலையில் இந்தியாவில் திறமையான இடது கை பேட்ஸ்மேன்களுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் வரும் உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பதினால் வெற்றி பெரும் வாய்ப்பு இந்தியாவிற்கு சாதகமாக இருந்தாலும், ஏற்கனவே காயம் அடைந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர யாரும் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த பிரச்னை குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “இந்தியா அணியில் ஜடேஜா இடது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே சமயத்தில் குறிப்பிட்ட நான்கு இடங்களைத் தவிர, இரண்டு இடது கை வீரர்கள் வர வேண்டும் என்று நான் நினைக்கும் மூன்று நிலைகள் உள்ளன. இப்போது இங்குதான் தேர்வாளர்களின் பங்கு வருகிறது, ஏனென்றால் அவர்கள் அந்த இடத்திற்கு சரியாக இருக்கும் ஒருவர் யார் என்று அவர்களுக்குத் தெரியும்.

திலக் வர்மா ரன்கள் எடுப்பதில் மிகவும் பசியாக இருப்பதினால் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் இந்திய அணியில் நடுவரிசையில் விளையாட வைக்கலாம். மேலும் எனக்கு ஒரு இடது கை வீரர் வேண்டும். நான் ஒரு இடது கை வீரரைத் தேடுகிறேன் என்றால் நான் உண்மையில் அந்த திசையையே பார்ப்பேன். மேலும் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக இஷான் கிஷான் இந்திய அணியுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அவர் விக்கெட்டுகளை கீப்பிங் செய்யப் போகிறார் என்றால் அவர் எப்படியும் கண்டிப்பாக அணியில் இடம்பிடிப்பார். ஆனால் இந்திய அணியில் இரண்டு இடது கை வீரர்களையும் ஜடேஜா உட்பட மூன்று இடது கை வீரர்கள் இருக்க வேண்டும். இந்நிலையில் இஷான் கிஷான் கடந்த 15 மாதங்களாக இந்திய அணியில் இருக்கும் போது மற்றது வீரர் தேட வேறு எங்கு செல்ல வேண்டும் என்றார் ரவி சாஸ்திரி.



