இந்திய அணியில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பலருக்கும் வாய்ப்பு எனப்து குறைவாகத்தான் கிடைக்கிறது. சிலர் மட்டுமே தான் சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட்டில் நிலைத்து நிற்கின்றனர். ஆனால் அப்படி திறமையான வீரர்களே இந்திய அணியில் இருந்தும் இந்திய தொடர்ந்து உலக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகின்றது.

அதே போல திறமை இருந்தும் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போன பல வீரர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கூற வேண்டும் என்றால் மோஹித் ஷர்மா, இஷாத் சர்மா, விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பலரை உதாரணமாக கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் துரஷ்ஷிடவசமாக இவர்களுடன் இணைந்தவர் தான் அம்பாத்தி ராயுடு.
அம்பாதி ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் ஆறு டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அம்பாதி ராயுடு 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். அதே போல இந்திய அணியில் பேட்ஸ்மேன் இல்லாத போது 2018 லிருந்து 2019 வகையில் 1 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருந்தார். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையில் அவரால் இடம் பெற முடியாவில்லை.

இந்நிலையில் ராயுடு இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த வருட ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்று மும்பையுடன் 3 கோப்பைகளையும், சென்னையுடன் 3 கோப்பைகளையும் வென்ற பின்னர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இந்தியாவில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பாத்தி ராயுடு தெரிவித்தார்.

இதனை அடுத்து பலர் ராயுடு விலகுவது குறித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியுள்ளார் “அவர் கூறுகையில் ராயுடு கண்டிப்பாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை விளையாடி இருக்க வேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஏனென்றால் அவரை இந்திய அணியின் நான்காவது வீரராக தயார் செய்து வந்தார்கள்.
ஆனால் 2019 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை அணியை அறிவிக்கும் போது ராயுடுவின் பெயர் அதில் இல்லை. அது அப்போது அணிவருக்குமே ஆச்சரியமாக இருந்தது என அப்போதைய கேப்டன் விராட் கோலியையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார் அனில் கும்ப்ளே.




