உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி இன்னமும் 1 சதம் அடித்தார் என்றால் சச்சின் சாதனையை சமன் செய்து விடுவார். மேலும் அது இந்த உலக கோப்பை போட்டியில் நடக்கும் என்று பலரும் கணித்திருக்கின்றனர்.
மேலும் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவரும் விராட் கோலி இந்திய அணிக்கு முதல் போட்டியிலேயே நம்பிக்கை கொடுத்து வெற்றி பெற செய்தார். அதற்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக 95 ரன்கள் மிகவும் முக்கியமாக இருந்தது. இந்நிலையில் விராட் கோலிக்கு வரும் 5ஆம் தேதி பிறந்தநாள். அதே நாளில் இந்தியா ஈடன் காற்றுடன் மைதானத்தில் தென்னாபிரிக்க அணியை எதிகொள்ள இருக்கிறது.

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் ரிசவான் விராட் கோலிக்கு பிறந்தநாளுக்கு முன்பாகவே வாழ்த்து கூறியுள்ளார். அவர் பேசுகையில் ” நவம்பர் 5ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் என்பதை அறிவது நன்றாக இருக்கிறது. அவருக்கு நான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. ஏனெனில் அதை நான் நம்புவதில்லை

ஆனால் இம்முறை உங்களுக்கு பிறந்தநாள் சிறந்த நாளாக அமைய நான் வாழ்த்துகிறேன் விராட். குறிப்பாக அவர் தன்னுடைய பிறந்த நாளில் 49வது ஒருநாள் சதத்தை அடிப்பார் என்று நம்புகிறேன். மேலும் இந்த உலகக் கோப்பையில் அவர் 50வது சதத்தை அடிக்க வேண்டும் என்றும் வைத்துவதாக கூறினார் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்.




