இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கு விக்கெட் கீப்பர்களின் இடத்தில் இருப்பவர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான். இவர்கள் இருவருமே திறமையான விக்கெட் கீப்பர்கள் என்றே சொல்லலாம். அதிலும் சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங் தன்மை மற்றவர்களை விடமும் சிறப்பாகவே இருக்கும். ஆனால் இவருக்கு பெரிதாக வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை, இருந்த போதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு நாள் போட்டியில் ஒரு வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சாஞ்சுசாம்சன் சிறப்பாக அரை சதம் அடித்தார். ஆனால் டி20 தொடரில் முதல் போட்டியில் முக்கியமான நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பறிகொடுத்தார் சஞ்சு சாம்சன். ஒருவேளை அந்த நேரத்தில் சானு சாம்சன் சிறப்பாக விளையாடியிருந்தால் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கும், இவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா சஞ்சு சாம்சன் எங்கே இறங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” T20I கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனை நம்பர் 6 இல் விளையாட அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவருக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் முக்கியம்.
Only good shot of Sanju from yesterday's knock 🙂#SanjuSamson #INDvsWI pic.twitter.com/bqmfwROnrg
— Jai Krishna 💖 (@SundaramVeerar2) August 4, 2023
உலகக் கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரு பினிஷராக விளையாட வைக்க போகிறீர்கள் என்றால் அவர் அந்த இடத்தில் விளையாடுவது குறித்து நன்கு புரிந்துகொள்வது முக்கியம். அந்த இடத்தில் அவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அந்த அளவிற்கு அதை அவரால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது, அங்கேயும் அவர் பாதி சீசனில் டாப் ஆர்டரிலும், மீதமுள்ள பாதியை நம்பர் 6 இடத்திலும் விளையாடினால் அதனால் அவரால் அந்த இடித்தில் இறங்ககுவது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.
அவர் இந்தியாவுக்காக விளையாடும்போது 3வது இடத்தை அவருக்கு வழங்க போவது கிடையாது. ஏனென்றால் அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் அல்லது விராட் கோலி பிடிக்கலாம். எனவே அவர் இரண்டு நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார் ராபின் உத்தப்பா. இந்நிலையில் ஒருநாள் போட்டியின் போது விரைவாக களமிறங்கிய சஞ்சு டி20 போட்டியின் போது தாமதமாக களமிறங்கினார். இதனால் அவரால் சையாக மைத்தனத்தை படிக்க முடியாததே அவர் ஆட்டமிழக்க காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.




