மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியானது நேற்று இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் பொறுமையாக. இந்த போட்டியில் கலந்து கொள்வதாக இருந்த சிராஜ் ஓய்வுஎடுக்க சென்றதால், அவருக்கு பதிலாக உமர் மாலிக்கிற்கும், சாஹலுக்கு பத்திலாக குல்தீப் யாதவிர்க்கும் வாய்ப்பு வழங்கப்படடது. இந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொண்ட இருவரும் சிறப்பாக பந்துவீசிய இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை 114 ரன்களுக்கு சுருட்டியது.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்தியா புதுவிதமாக இளம் வீரர்களை முன்னதாகவே களமிறங்கியது. குறிப்பாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், தாகூர் போன்ற வீரர்கள் முன்னதாகவே களமிறங்கிய நிலையில் இந்திய எழுத்தாக இந்த போட்டியில் வென்றது. ஆனால் ரோஹித் ஷர்மா 7வதாக களமிறங்க விராட் கோலி பேட்டிங் செய்யவே இல்லை. இஷான் கிஷான் அதிகபட்சமாக 52 ரன்களை விளாசினார். இதனையடுத்து பேட்டியில் பேசிய ரோஹித் ஷர்மா தான் தாமதமாக வந்த காரணத்தை கூறினார்.

ரோஹித் சர்மா கொடுத்த பேட்டி :
இந்த பேட்டியில் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் “பிட்ச் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது பந்துவீச்சாளர்கள் முதலில் பந்துவீசுமாறு இருந்தது. இந்த விக்கெட் ஸ்பின்னர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரியான விக்கெட்டாக இருக்கும் என்று நினைத்தோம். அதற்கு தகுந்தாற் போலவே எங்களின் பந்துவீச்சாளர்கள் சரியாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இலக்கு 115 என்று எளிதாக இருந்ததினால், நாங்கள் புதிதாக வந்துள்ள ODI வீரர்களுக்கு ஆட்ட நேரத்தை வழங்க விரும்பினோம், முடிந்தவரை அந்த விஷயங்களை முயற்சி செய்தோம். அவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்று எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் நிறைய வராது என்று நினைக்கிறேன். நான் இந்தியாவுக்காக அறிமுகமானேன் மற்றும் 7வது இடத்தில் பேட்டிங் செய்தேன். இது அந்த நாட்களை எனக்கு நினைவூட்டியது.
முகேஷ் புத்திசாலித்தனமாக பந்தை நல்ல வேகத்தில் ஸ்விங் செய்வார். அவரால் இந்த அளவுக்கு விளையாட முடியும் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரை அதிகம் பார்த்ததில்லை. எந்த சூழ்நிலைகளாக இருந்தாலும் நாம் சரியான பகுதிகளில் பந்து வீசினால் விக்கெட்டுகளை எடுக்க முடியும். எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாகச் செயல்பாட்டார்கள். இஷான் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடினார் என்றார் இஷான் கிஷான்.




