உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது.

இதற்கு முன்னதாக இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோதிய நாக் அவுட் போட்டிகளில் அதிக அளவில் நியுசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. அதுவே இந்த முறை நிகழுமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியான முடிவை எடுத்ததார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணிக்கு அதிக பட்சமாக விராட் கோலி 117 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 107 ரன்களும், கில் 80 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணி அணிக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார் இருப்பினும் அவரால் அரை சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார். ஆகையால் இந்திய அணி 4விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 397 ரன்களை குவித்து இருந்தனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு மோசமாகத்தான் இருந்தது. சவூதீ 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டு மட்டுமே எடுத்து இருந்தனர்.

398 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி இருந்தாலும் அதன் மிட்சல் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்களை மட்டுமே அடித்து ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணியின் அதிகபட்சமாக மிட்சல் 134 ரன்களுக்கும் கேன் வில்லியம்சன் 69 ரன்களிலும் பிலிப்ஸ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி சார்பில் ஷமி 7 விக்கெட்டுகளையும் குல்தீப் 1 விக்கெட்டையும் பும்ரா 1 விக்கெட்டையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா கூறுகையில். நான் உங்களுக்கு ஒரு சதி திட்டத்தை பற்றி சொல்லுகிறேன் டாஸ் போடும் போது நாணயதத்தை ஏன் ரோஹித் ஷர்மா அவ்வளவு தூரம் வீசினார் இதனால் எதிர் அணியின் கேப்டன் நாணயம் என்ன பக்கத்தில் உள்ளது என்று குறித்து அவரால் ஆய்வு செய்ய முடியாது ஆகையால் தான் எவ்வளவு தூரம் வீசினார். என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார். இதுக்கு முன்னதாக அவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பான பந்துகளை வீசக் கொடுப்பதாக வினோதமான குற்றச்சாட்டை ஒன்று கூறியிருந்தார்.




