இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

இவர 60 சர்வதேச டி20 போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டெஸ்ட் போட்டிகள் என விளையாடி அதில் மொத்தமாக 319 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக கந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு முதுகில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்க்க விளையாடாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல குணமாகி இருக்கிறார்.
மேலும் வரும் உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதில் அவர் செயல்பாட்டை பார்த்து விட்டுத்தான் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ரா பற்றி பேசியிருக்கிறார்.

ரோஹித் ஷர்மா கொடுத்த பேட்டி :
பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பும் போது அவருடைய அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார், மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் விளையாடினால் அது நல்லது, அவர் உலகக் கோப்பைக்கு முன் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு வீரர் கடுமையான காயத்தில் இருந்து திரும்பும் போது, போட்டியின் உடற்தகுதி, மேட்ச் ஃபீலிங் ஆகியவை சில முக்கிய கூறுகள் ஆனால் அவையெல்லாம் தற்போது காணவில்லை. அவர் உலக கோப்பை அணியில் இடம்பெறுவாரா? என்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியாது. முன்பு திட்டமிடப்பட்டதை நாங்கள் பார்ப்போம். எல்லாமே அவர் குணமடைவதைப் பொறுத்து தான் இருக்கிறது. நாங்கள் NCA உடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், தற்போது விஷயங்கள் நேர்மறையாக செல்கிறது என்றார் ரோஹித் ஷர்மா.
பெரிய போட்டிகளுக்குச் செல்லும்போது உங்களுக்கு அனுபவம் தேவை. ஆனால் காயங்கள் ஏற்பட்டால், அதை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாது. எங்கள் அணியில் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர், ஆனால் உலகக் கோப்பையில் விளையாடப் போகும் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முடிந்தவரை பல போட்டிகளை வழங்க முயற்சிக்கிறோம், அப்போதுதான் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும்.




