எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை கடந்த 2011ஆம் ஆண்டு வென்றது. இருப்பினும் தற்போதைய இந்திய கேப்டனும் நட்சத்திர தொடக்க வீரருமான ரோஹித் சர்மா இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் 2011 உலக கோப்பைக்கு தேர்வாகாத போது எப்படி இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “கடந்த 2003ல் இறுதிப் போட்டி வரை இந்தியா சிறப்பாக விளையாடியது. உங்களுக்கு தெரியும் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் அப்போது அற்புதமாக இருந்தார். அதிகமான ரன்களை விளாசினார். பின்னர் 2007 உலகக் கோப்பை வருகிறது ஆனால் அதற்கு பிறகு எங்களினால் வெற்றி பெற முடியவில்லை. சொல்லப்போனால் அந்த போட்டிக்கு பிறகு எழுக்களினால் லீக் கட்டத்திற்குப் பிறகு தேர்வாகவே திணறி வருகிறோம். அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மேலும் கடத்த 2011 உலக கோப்பை குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் “2011 உலக கோப்பையானது அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்து வருகிறது. எனக்கு நியாபகம் இருக்கிறது நான் வீட்டில் இருந்து அந்த போட்டிகளை பார்த்தேன். ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு பந்தை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதையும் பார்த்தேன். எனக்கு அப்போது இரண்டு விதமான உணர்வுகள். ஓன்று நான் அந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தம், உண்மையில் அது மிகவும் ஏமாற்றக்காக இருந்தது. அதனால் நான் உலக கோப்பை போட்டிகளை பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன்.

இருந்த போதிலும் பார்த்தேன், இரண்டாவது இந்திய அணியானது அந்த் தொடரின் காலிறுதி போட்டிக்கு முன்பாக மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ரோஹித் சார்ம கடந்த 2011 உலக கோப்பையின் போது அணியில் நியமிக்கப்படவில்லை, இது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது, ஏனென்ற்றால் அதற்கு முந்தய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தோனி தலைமையிலான இந்திய அணியில் வாய்ப்பு கிடைகாத்துதான் அந்த வருத்தத்திற்கு காரணம்.

மேலும் பேசிய ரோஹித் சர்மா கடந்த 2015 மற்றும் 2019ஆம் உலக கோப்பை போட்டிகளில் நான் இருந்தேன், அது மிகவும் அற்புதமான நிகழ்வாக இருந்தது, நாங்கள் அரையிறுதி போட்டி வரையில் சென்றோம். இறுதி போட்டிக்கு செல்ல எங்களினால் முடிந்த அனைத்தையும் செய்தும் மீண்டும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நல்ல வேலையாக நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாட இருக்கிறோம்.
எனவே எங்களுடைய அந்த துரதிஷ்டத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு தெரியும் நாம் உலக கோப்பை போட்டியை ஓன்று அல்லது இரண்டு நாட்களில் வெற்றி பெற்று விட முடியாது என்று. அதற்காக நீங்கள் ஒன்றறை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார் ரோஹித் சர்மா.




