அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது கடந்த 2ஆம் தேதி நடந்தது.

அந்த போட்டியில் தொடக்க வீரர்கள் அதிர்ச்சி கொடுத்து ஆட்டமிழந்த நிலையில் பின்னர் இஷான் கிஷனுடன் கைகோர்த்து கொண்ட ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிட்டத்தட்ட வீழும் தருவாயில் இருந்த இந்திய அணியை கைகொடுத்து மதிக்கத்தக்க ரன்களுக்கு கொண்டு வந்தனர் இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா.
இந்நிலையில் உலக கோப்பை தொடரிலும் இவர் இடம்பெறுவர் என்பது உறுதியான நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியானது. இந்த தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தான் அப்போது பேசிய ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் இவருவரும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்.

ரோஹித் சர்மா கூறுகையில் ” ஹர்திக் பாண்டியாவின் பார்ம் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு விஷயங்களையும் செய்யும் ஒரு வீரர் அது முக்கியமானது. கடந்த ஓராண்டில் அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக இருந்தார். இது இந்திய அணிக்கு வரும் காலங்களில் முக்கியமானது என்று கூறினார் ரோஹித் சர்மா.
மேலும் கூறுகையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் நீங்கள் தரத்தைப் பார்த்தீர்கள். இஷானும் ஹர்திக்கும் தங்களது நிலைகளை உயர்த்தி நன்றாக பந்துகளை அடித்தனர். வெளிப்படையாக, பந்துவீச்சிலும் அவர் சிறந்தவர். அவர் எங்களுக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக பந்து வீசினார். கடந்த ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்த விதம் அவரின் முதிர்ச்சியை காட்டுகிறது. இது எங்களுக்கு நல்ல அறிகுறிகள்
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த அணியானது சமநிலை மற்றும் ஆழத்துடன் நாம் செய்யக்கூடிய சிறந்தது இதுதான். அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள், 4 பந்துவீச்சாளர்கள், ஆறு பேட்டர்கள் உள்ளனர். நாங்கள் நிறைய யோசித்து இந்த அணியை தேர்வு செய்துள்ளோம். இது எங்களுக்கு சிறந்த கலவையாகும் என்றார்.



