இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 3 வகையான உலக கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. மேலும் இதில் முக்கியமான ஓன்று என்னவென்றால் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தது தான். குறிப்பாக தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவிற்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார்.
கடந்த 2011 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவை தோனி கழற்றி விட்டாலும் அதற்கு பிறகு ரோஹித்தின் திறமையை புரிந்து கொண்ட தோனி அவரை கொண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் தோனியுடன் விளையாடிய கம்பீர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியிருந்தார்

அவர் கூறுகையில் “தோனி கேப்டன்சியின் காரணமாக, ஒரு பேட்டராக அவர் சாதித்ததை அவரால் சாதிக்க முடியவில்லை. கேப்டனாக பல முறை அணியை முதலில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை எம்.எஸ் தோனி கேப்டனாக இல்லாவிட்டால், அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருக்க முடியும். அவர் தற்போது உள்ள பல ODI சாதனைகளை முறியடித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். தோனி நிறைய கோப்பைகளை வென்றுள்ளார், ஆனால் தனித்தனியாக அவர் கோப்பைகளுக்காக சர்வதேச ரன்களை தியாகம் செய்தார் என்று கூறியிருந்தார்
இந்நிலையில் தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை என்று கம்பீர் கருத்து பற்றி ஸ்ரீசாந்த் பதில் கூறியுள்ளார். அவர் பேசுகையில் 3வது இடத்தில் தொடர்ந்து விளையாடியிருந்தால் தோனி நிறைய சாதனைகள் படைத்திருப்பார் என்று கௌதம் பாய் சமீபத்தில் தெரிவித்தார். இருப்பினும் தோனியை பொறுத்த வரை எப்போதுமே அதிக ரன்கள் எடுப்பதை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று நினைத்தார். மேலும் அணிக்காக தேவைப்படும் போது வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் திறமையையும் பெற்றிருந்த அவர் இந்தியாவுக்கு உலக கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.
எனவே அதற்கான பாராட்டுக்கள் தோனிக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்காக அவர் தம்முடைய பேட்டிங் இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை. மாறாக எந்த இடத்தில் எந்த மாதிரியான வீரர்கள் அசத்துவார்கள் என்பதை அவர் கண்டறிந்து அதற்கேற்றார் போல் வாய்ப்பு கொடுத்தார். பொதுவாக தம்முடைய வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே அவருடைய கேப்டன்ஷிப் ஸ்டைலாக இருந்தது. அவர் எப்போதுமே இந்திய அணியை மட்டும் தான் முதலாவதாக நினைத்தார்” என்று கூறினார்.



