இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே சச்சின் என்று தான் அனைவருக்கும் நியாபகம் வாரும். கிட்டத்தட்ட இவர் கிரிக்கெட்டில் செய்த சாதனையை இன்னும் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15000 ரன்களுக்கும் மேலும் ஒருநாள் போட்டிகளில் 18000 ரன்களுக்கு மேலும் அடித்துள்ளார். அதோடு அதிக 50ஸ் , 4ஸ் என பல முறியடிக்க முடியாத சாதனைகளை சச்சின் செய்திருக்கிறார். இதனாலேயே சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

சச்சின் கூறியது :
இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் சச்சின் பேசிய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் “மேஜிக்கல் அதிகமாக வருத்தப்பட தருணம் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சச்சின் கூறுகையில் “2000 அல்லது 2001ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் வந்த போது ஒரு ஆட்டத்தில் எங்களிடம் 4 விக்கெட்டுகள் இருந்தது 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் நாங்கள் தோற்றுவிட்டோம்.
நான் அந்த போட்டியின் போது ட்ரெஸிங் ரூமில் ஏமாற்றம் காரணமாக குழந்தை போல அழுது கொண்டிருந்தேன். ஆனால் அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு இந்த உலகத்தை சந்தித்தேன். ஆட்டநாயகன் விருதையும் வாங்கினேன். அந்த நிகழ்வில் தான் நான் அதிகம் வருத்தப்பட்டிருக்கிறேன் என்று கூறினேனேன்.
இந்தியா vs பாகிஸ்தான் :
அந்த போட்டியில் ஜனவரி 31, 1999. இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்டின் 4-ம் நாள் ஆட்டத்தை சென்னையில் விளையாடினார்கள். அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 273 பந்துகளில் 136 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவிற்கு வெற்றி பெற 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.பாகிஸ்தானுக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.

இந்த போட்டி யாருடைய பக்கம் வேண்டுமாலாலும் சாயலாம் என்றிருந்த நிலையில் சென்னையில் மைதானத்தில் ரசிங்கர்கள் கூட்டம் பதட்டமாக இருந்தது. ஏனென்றால் சச்சினுக்கு பிறகு வந்த கும்பில், ஸ்ரீநாத், எஸ்பி ஜோஷி உள்ளிட்டோர் ரன்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க இந்தியாவை பாகிஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த நாளை இன்னமும் இந்திய ரசிகர்கள் யாராலும் முடியாது.




