உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது.

இதற்கு முன்னதாக இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோதிய நாக் அவுட் போட்டிகளில் அதிக அளவில் நியுசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. அதுவே இந்த முறை நிகழுமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியான முடிவை எடுத்ததார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இணைந்து அணிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தனர். 47 ரன்கள் இருந்த நிலையில் சவுதீ வீசிய பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த சுப்மான் கில்லுடன் கோலி இணைந்து நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதற அடித்து வந்தனர் விராட் கோலி தனது சதத்தை கடந்ததன் மூலம் உலக கோப்பை ஒரு நாள் போட்டிகளில் அதிக சதத்தை அளித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்த போட்டியில் முறியடித்துள்ளார்.

மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் காயம் காரணமாக சற்று நேரம் ஓய்வெடுக்க சென்ற நிலையில் அப்போது வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கோலி இணைந்தும் சிறப்பாக விளையாடி வந்தனர். அவரும் தனது பங்கிற்கு ஷ்ரேயஸ் ஐயர் சதத்தை பூர்த்தி செய்து நியூசிலாந்தின் பந்துவீச்சை சிக்ஸ்சர் மட்டும் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு வந்தார் அதன்பின் விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்பு கே எல் ராகுலுடன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து அணிக்கு நல்ல இலக்கை எடுத்து வரும் முயற்சி செய்து நியூசிலாந்தின் பந்துவீச்சினை பறக்க விட்டு வந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 105 ரன்கள் ஆட்டம் எழுந்து வெளியேறினார். அதன்பின் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் வந்த வேகத்தில் செல்ல காயம் காரணமாக வெளியேறி இருந்த கில் மீண்டும் மைதானத்திற்குள் வந்தார். இருப்பினும் கில்லால் அவர் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர் 80ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார் . எனவே இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 397ரன்களை குவித்து இருந்தது. நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள் சற்று இந்திய அணியும் வீரர்களுக்கு பந்து வீசசிரமப்பட்டு வந்தனர். சவுதீ 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
I… pic.twitter.com/KcdoPwgzkX
விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்து இருந்தார். அதில் 9 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் அவர் சச்சினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இது குறித்து சச்சின் கூறுகையில் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ய, எனது சொந்த மைதானத்தில் ஐசிங் உள்ளது.




