கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
மேலும் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது ஒரு பலருக்கும் நிம்மதியை தருகிறது.

அதே சமயம் ஆசிய கோப்பையில் பும்ரா, ஷமி, சிராஜ், ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ண ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் சுழற்பந்து வீச்சாளராகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் ஆசிய கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியை பற்றி பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட்.
ஆவர் கூறுகையில் “ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமியைத் தவிர, இந்தியாவில் முழுமையான பந்துவீச்சாளர் இல்லை. ஒரு மேட்ச்வின்னர் என்று வேறு யாரும் இல்லை. முகமது சிராஜ் தன்னுடைய பந்துவீச்சில் கணிசமாக மேம்பட்டுள்ளார். இருப்பினும், இந்த இரண்டு அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தவிர. , எதிரணியை அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் இந்தியாவில் இல்லை. எனவே, அவர்கள் ஏன் தங்கள் பேட்டிங்கை அதிகம் நம்பியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

இங்கிலாந்தைப் போலவே, இந்தியாவும் பெரிய ஸ்கோரை அமைக்க தங்கள் பேட்டர்களை நம்பியிருக்கிறது, ஏனெனில் அவர்களிடம் தரமான பந்துவீச்சார்கள் இல்லை. இந்தியா இதற்கு முன்னால் பந்துவீச்சில் போதுமான தேர்வுகளை அவர்கள் விரும்புவார்கள்.

ஆனால் இந்தியா இப்போது ஒரு வித்தியாசமான அணியாகத் தெரிகிறது. அவர்கள் பரிசோதனை செய்வதில் அதிகம் இருந்தனர், ஆனால் அந்த அம்சம் இப்போது போய்விட்டதாகத் தெரிகிறது. இந்த அணியின் அடிப்படையில் விளையாடும் வீரர்களின் செயல்திறன் இப்போது மிகவும் கணிக்கக்கூடியது. இந்த நிலைமைகளில் இந்தியா கடினமாக இருக்கும் என்றார் சல்மான் பட்.



