கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2021 டி20 தொடரில் பாஸ்கிதான் அணியிடம் வீழ்ந்த இந்தியா வரும் உலக கோப்பை தொடரிலும் வீழ்ந்தது என்றால் கண்டிப்பாக அது பிசிசிஐ மீதும் இந்திய அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டியா கட்டாயத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் பாஸ்கிதான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் இந்தியா vs பாஸ்கிதான் போட்டி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ளும்போது அவர்களின் மீது தான் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது, எங்களின் மீது கிடையாது. நான் அவர்களுடன் விளையாடும்போது அவர்கள் எங்களை வீழ்த்துவார்கள் என்று எங்களுடைய அணி ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தினோம், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்றது.

2021 T20 உலகக் கோப்பையில் இந்தியாவை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது, மேலும் சமீபத்தில் ACC வளர்ந்து வரும் கோப்பையின் இறுதிப் போட்டியையும் பாஸ்கிதான் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாஸ்கிதான் நாட் அவுட் போட்டிகளின் போது சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை தோல்வியை தழுவியது. அதோடு அவர்கள் ஐசிசி போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக நாக்அவுட் போட்டியில் தோல்வியை தழுவி வருகின்றனர் என்றார் சல்மான் பட்.
மேலும் பேசிய அவர் உலக கோப்பை போட்டிக்கான ப்ரோமோவில் பாஸ்கிதான் அணியின் முக்கிய வீரர்கள் இல்லாதது குறித்து விமர்சித்த அவர் கூறுகையில் “அவர்களிடம் இருந்து ஏன் எதையும் எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் உங்களுடன் எப்போதாவது நல்லது செய்திருக்கிறார்களா? ப்ரோமோவை உருவாக்கியவருக்கும் தெரியும் அது விவாதத்தை கிளப்பும் என்று. வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருப்பார்.

நம்மை தொந்தரவு செய்யும் அளவுக்கு அவர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க கூடாது. அவர்கள் ஒரு விளம்பரத்தை உருவாக்கினர்கள். எனவே நாமும் சொந்தமாக ஒன்றி உருவாக்கி அதை ஒளிபரப்ப வேண்டும். ஐசிசி என்பது பிசிசிஐ தான். ஐசிசி தற்போது பொருளாதாரத்தை விரிவுபடுத்த நினைக்கிறது, அதனை பிசிசிஐ நிதியுதவி செய்கிறது என்றார் சல்மான் பட்.




