இந்தியாவின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த இவர் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனனயை படைத்தார். மேலும் இன்னமும் கிரிக்கெட் வரலற்றில் தன்னுடைய 500வது போட்டியில் சதம் விளாசிய வீரர் சாதனையையும் படைத்தார் விராட் கோலி.

மேலும் 34 வயதாகும் விராட் கோலி சச்சினின் சாதனையாக 500 போட்டிகளில் 75 சதம் என்ற சாதனையை முறியடித்து 500 சர்வதேச போட்டியில் 76 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் விராட் கோலி. முதல் போட்டியில் சதம் அடிக்க தவறினாலும் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து 4 வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டில் சதம் அடித்த விராட் கோலியை முன்னாள் முன்னாள் பாஸ்கிதான் வீரர் சல்மான் பட் தன்னுடைய யூடியூப் சேனலில் புகழ்ந்து பேசியுள்ளார்.
சல்மான் பட் கூறியது :
அவர் கூறியதாவது “விராட் கோலியின் உடற்தகுதியைப் பார்க்கும்போது அவரினால் இன்னமும் தொடர்ந்து விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அவர் ரன்களை குவிப்பதற்காகவே விளையாடுகிறார். மேலும் அவர் உடற்தகுதி மட்டுமல்ல விராட் கோலி உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க முடியும். அவர் தனக்குள் ஒரு கல்லூரியையே வைத்திருப்பவர். அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையது.

விராட் கோலியுன் அர்ப்பணிப்பு மற்றும் அழுத்தத்தின் கீழ் திறமையாக செயல்படும் திறன் போன்றவற்றில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றார் சல்மான் பட். முதல் போட்டியில் வெற்ற பிறகு இந்தியா மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு சரியான தொடக்கத்தை வழங்க, பின்னர் கோஹ்லி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுக்க உதவினார்கள்.
இந்நிலையில் இந்த பேட்டியில் சல்மான் பட் மேற்கிந்திய தீவுகள் பற்றியும் பேசினார் “இதுவரை போட்டியானது ஒருதலைப்பட்சமாகத்தான் இருந்து வருகிறது. இந்தியா ஒரு சிறிய அணிக்கு எதிராக விளையாடுவது போல் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகள் எப்படியாவது 350 அல்லது 375 ரன்களை எட்டினால் ஒருவித போட்டியைக் நம்மால் காண முடியும். இருப்பினும், பந்துவீச்சில் இந்தியா சிறந்த அணி. வெஸ்ட் இண்டீசுக்கு திறமை இருக்கிறது, ஆனால் பேட்டர்கள் ஒரு முறை ஆடம்பரமான ஷாட்களை ஆடுகிறார்கள். இதுதான் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது என்று தெரிவித்தார் சல்மான் பட்.
இந்நிலையில் தற்போது இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை எடுத்துள்ளது.



