அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடைபெறுகிறது. இது உலக கோப்பைக்கு முன்னதாக நல்ல பயிற்சி ஆட்டம் போல இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து லீக் சுற்றில் விளையாடவில்லை.

அதனால் வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் மிகச் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள ராகுல் சூப்பர் 4 சுற்றில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி சமீப காலங்களில் பல வீரர்கள் காயமடைந்து இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் 2016 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்திருந்தும் விளையாடிய தோனி குறித்து பேசியுள்ளர் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.
அவர் கூறுகையில் “வார்த்தைகளை விட நாம் செய்யும் செயல் அதிகமாக பேசும் என்று சொல்வார்கள். அந்த ஆசிய கோப்பையில் தோனி விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று நினைத்தோம். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாட மாட்டார் என்று எங்களுக்கு தோன்றியது. ஏனென்றால் அவர் காயத்தால் பக்கவாட்டு பகுதியில் நகர முடியாமல் வேகமாக ஓட முடியாமல் தடுமாறினார்.

இருப்பினும் தோனி இந்திய அணிக்காக களத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக போட்டி துவங்குவதற்கு முன்பாக அவர் பார்க்கில் ஓடி நம்மால் முடிந்த அளவுக்கு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். இது போன்றவற்றை யாரும் அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள். மேலும் விளையாட்டில் விளையாடும் வீரர்களுக்கு தான் அந்தப் போட்டியின் மதிப்பு தெரியும்” என்று கூறினார்.
அதாவது அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக லேசான காயத்தை சந்தித்ததால் தோனி பக்கவாட்டில் நகர முடியாமல் இருந்ததாக சஞ்சய் பங்கார் கூறியுள்ளார். அதனால் விளையாட மாட்டார் என்று கருதப்பட்ட அவர் கேப்டனாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது அவசியம் என்று கருதி காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடியதைப் விலகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பையில் தம்முடைய குழந்தை பிறந்த போதும் கேப்டனாக இருந்ததால் நாடு திரும்ப முடியாது என்று தெரிவித்த தோனி தொடர்ந்து விளையாடினார். அந்தளவுக்கு எப்போதுமே தேசப்பற்றுடன் விளையாடிய அவர் அந்தப் போட்டியில் காயத்துடன் விளையாடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம்.



