இந்த போட்டியில் இந்தியா துரதிஷ்ட வசமாக பெரும் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணியாது 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.

இது இந்திய அணியின் வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்த உலக கோப்பை முழுவதும் பிரமாதமாக விளையாடிய அணி இந்தியா. இந்த தொடரின் நாயகன் வீரர் விராட் கோலியை கொண்ட அணி இந்தயா. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமியை கொண்ட அணி இந்தியா இப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக இருந்தும் இந்தியா தோல்வியை தழுவியது.

மேலும் கடந்த உலக கோப்பை போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது இந்தியா அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. பின்னர் தற்போது ரோஹித் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக விளையாடியும் இந்திய அணிக்கு உலக கோப்பை என்பது எட்டாத ஒரு இடமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் வரும் 2027ஆம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விராட் கோலி விளையாடவே இப்படி நடப்பதாக கூறியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.
அவர் கூறுகையில் “உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை விராட் கோலிக்கு இருக்கிறது. அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதாக நான் உணர்கிறேன், மேலும் கடவுள் அவருக்காக ஏதாவது சிறப்பான விஷயத்தை வைத்திருக்கலாம். விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தைக் கடந்தார், மேலும் சச்சினும் தனது முதல் தங்கப் பதக்கத்திற்காக ஆறாவது உலகக் கோப்பையை விளையாட வேண்டியிருந்தது.

கடவுள் ஏன் இவ்வளவு பெரிய வீரர்களுக்கு இவ்வளவு கடினமான சோதனைகளை எடுக்கிறார் என்று தெரியவில்லை. அதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவர் அடுத்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று விதி இன்னும் விரும்புகிறதா என்று தெரியவில்லை. மேலும் அவர் தங்கப் பதக்கத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார் சஞ்சய் பாங்கர்.