உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் உலக கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் யாரும் எதிர்பார்க்காதவாறு சூரிய குமார் யாதவிர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டி20 கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் யாதவ் ஜாம்பவான் வீரராக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் கொஞ்சம் நிலைதன்னைமை இல்லாதவராக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “சூரியகுமார் யாதவ் அணியில் இருக்கிறார் என்று இந்திய அணியின் பயிரசியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே கூறிவிட்டார். இன்னிங்ஸின் நடுப்பகுதியில் எல்லைகள் அவ்வளவு எளிதில் வருவதில்லை என்பது மிகப்பெரிய காரணியாகும். மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகள் போகும் போது பவுண்டரிகள் எப்படி அடிப்பது. பந்து பழையதாகிவிடுவதால் பவுண்டரிகள் அடிப்பது என்பது பெரிய பிரச்சனையாக மாறுகிறதா?

டி20 போட்டியில், பந்து முழு இன்னிங்சுக்கும் திடமாக இருக்கும். ஆனால் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு அணிக்கும் கடைசி ஐந்து ஓவர்களில், பந்து மென்மையாக மாறும், அதனால் நீங்கள் அவ்வளவு எளிதாக பவுண்டரிகளை பெற முடியாது. இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு பேட்ஸ்மேனும் எப்படி ரன்களை எடுப்பது என்பது குறித்த ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும் சூர்யகுமார் யாதவ் ஒரு பல்துறை வீரர், அவர் நிச்சயமாக பவுண்டரிகளை குறிவைத்து அவற்றை எங்கு அடிக்க வேண்டும். அவர்களை எங்கு அடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு நல்ல யோசனை அவருக்கு இருக்கும். ஆனால் அவர் செய்ய வேண்டிய ஒன்று இருந்தால், 25 மற்றும் 40 வது ஓவருக்கு இடையில் எப்படி பேட்டிங் செய்வது என்பதைக் கண்டுபிடிப்பதுதான், ”என்று முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் மேலும் கூறினார்.



