தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு செல்லும் அணிகள் எது என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. இதனிடையே இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக் விளையாடிவரும் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக கோப்பை 2023 புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

ஆனால் இந்த உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவின் நிலை என்பது வேறு மாதிரியாக இருந்தது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னர் இந்திய அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் பெரும் சவால் இருந்தது. ஏனென்றால் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா அணி கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது.
அந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலேயே தெளிவாக தெரிந்தது. இதனால் இந்த முறை உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்வது கடினம் என்று பலரும் விமர்சித்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை உடனடியாக உலக கோப்பை தொடரில் விளையாட வைக்கும் ரோஹித் சர்மாவின் திட்டத்தை பலரும் எதிர்த்தனர். இருந்த போதிலும் பயிற்சியாளர் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தனுக்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர்.

அதன் காரணமாக காயம் முடிந்து திரும்பிய கேஎல் ராகுல் மற்றும் பும்ரா இருவருமே தற்போது சிறப்பான பார்மில் இருந்து வருகின்றனர், காயத்தில் இருந்து திரும்பியிருந்தாலும் பும்ரா வீசும் பந்துகளை எதிரணியின் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. அதே போல கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் அசத்துகிறார். இந்த ஒரு நிலைக்கு காரணம் ராகுல் மற்றும் ரோஹித் வீரர்களின் மீது வைத்த நம்பிக்கையே என கூறியுள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர்.

அவர் கொடுத்த பேட்டியில் “காயமடைந்த மற்றும் தன்னம்பிக்கை குறைந்த வீரர்களை ரோஹித் ஆதரித்தார் என்பதே அவரது சிறைப்பட்டு என நான் நம்புகிறேன். ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 வீரர்கள் காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார்கள், மேலும் அவர்கள் இந்த அணியின் ஒரு அங்கம் என்றும், அவர்களின் திறன்களை அணி நம்புகிறது என்றும், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை வழங்கப்பட்டது.
எந்த கேப்டனும் இதைச் சொன்னால், அது ஒரு வீரருக்கு எல்லாவற்றிற்கும் மேலானது. ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரை அடையாளம் கண்டுகொண்டபோது, இதேபோன்ற ஒன்றைச் செய்த மற்றொரு கேப்டன் சவுரவ் கங்குலி. எனவே, கேப்டனாக ரோஹித் சர்மாவின் அருமையான பங்களிப்பு இதுவாகும் என்று கூறியுள்ளார் சஞ்சய் பங்கர்.



