மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுத்த அணியின் நிர்வாகம் மூன்றவது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்து. இப்படியொரு நிலையில் முதல் வாய்ப்பை தவறவிட்ட சஞ்சு சாம்சன், இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 41 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இதனையடுத்து போட்டிக்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியை பற்றி பேசியிருந்தார்.
சஞ்சு சாம்சன் கூறியது :
அவர் கூறுகையில் “மைத்தனத்தில் களமிங்கிய இடையே விளையாடுவத் என்பது மிகவும் அற்புதமான ஒரு உணர்வாக இருக்கிறது. கொஞ்சம் ரன்களையும் எடுத்து என்னுடைய நாட்டிற்கு உதவியது எனக்கு மகிழ்ச்சி, நான் ஒவ்வொரு வீரருக்கு தனித்தனியான ஒரு திட்டம் வைத்திருந்தேன். நான் என்னுடைய கால்களை சரியாக பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் லெந்துகளை கட்டுப்படுத்தி ரன்களை அடிக்க விரும்பினேன்.
How's that for a start?!@IamSanjuSamson#INDvWIAdFreeonFanCode #WIvIND pic.twitter.com/6vLmU9KN0m
— FanCode (@FanCode) August 1, 2023
பொதுவாக இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது மிகவும் கடுமையான ஒரு விஷயம். அதுவும் பேட்டிங் ஆர்ட்டரில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கும் போது. நான் கடந்த 8-9 வருடங்களாக நிறைய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், இந்தியாவிற்காகவும் விளையாடி இருக்கிறேன். இதனால் அணியில் வெவ்வேறு இடங்களில் களமிறங்கினாலும் அந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு கொஞ்சம் இருந்தது.

இது உங்களுக்கு போட்டியில் கிடைக்கும் ஓவர்களின் எண்ணிக்கை மற்றும் இது பேட்டிங் நிலையைப் பற்றியது அல்ல, எனவே நீங்கள் அதற்கேற்ப தயாராக வேண்டும். கென்சிங்டன் ஓவல் மைத்தனத்தில் சற்று ஈரமாக இருந்தது, ஆனால் இதன் மேற்பரப்பு சற்று வறண்டு காணப்படுகிறது. புதிய பந்தில் அது நன்றாக வந்து கொண்டிருந்தது, ஆனால் பந்து பழையதாகிவிட்டதால் அது ஸ்பின்னர்களுக்கு எதிராக சற்று கடினமாக இருந்தது.
ரன்களை இங்கு அடிப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. இந்த போட்டியின் வெற்றி பெற்றதற்கான முக்கியமான காலம் இடியே களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தான். அவர்கள் தான் இடையே நிலையாக இருந்து ரன்களை குவித்தார்கள். எனவே எங்களுடைய பந்துவீச்சளர்கள் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதினால் எனக்கு நம்பிக்கையாக இருந்தது என்றார் சஞ்சு சாம்சன்.



