இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய அணியை சேவாக் பாராட்டி பேசி இருந்தார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலககோப்பை போட்டியாகும்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வெச்ச தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்ய இருக்கின்றது. மேலும் இந்திய அணிகள் சார்பில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முகமது ஷமி அணியில் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் சார்பாக அதிகபட்சமாக மிட்செல் ரன்களும் ரச்சின் ரவீந்திர 75 ரன்களும் பிலிப்ஸ் 23 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் போட்டியின் கடைசி கட்டங்களில் தான் போட்டிக்குள் வந்தனர். இந்திய அணியின் பௌலர்களில் அதிக பட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது நியுசிலாந்து அணி.

275 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அவ்வபோது விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களும் ரோஹித் ஷர்மா 46 ரன்களும் ஜடேஜா 35 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் சண்ட்னர் மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி இது வரை ஒரு தோல்வியை கூட தழுவவில்லை.
Great win. King Kohli doing it in grand style but it was an outstanding spell from Shami that restricted NZ to 273. Closest match for us and a wonderful win. pic.twitter.com/FVyRHOzFjt
— Virender Sehwag (@virendersehwag) October 22, 2023
சேவாக் கூறியது:
இந்த மாபெரும் வெற்றி குறித்து சேவாக்கு கூறுகையில் “மிகப்பெரிய வெற்றி இது கிங் கோலியின் பிரம்மாண்டமான முறையில் இதை செய்தார். ஆனால் ஷமியின் பந்து வீச்சு தான் நியூசிலாந்து அணியை 273 ரன்களுக்கு கட்டுபடுத்த முடிந்தது. உங்களுக்கு நெருக்கமான போட்டி மற்றும் அற்புதமான வெற்றி என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.



