உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை போட்டியானது இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மேலும் ஆசிய கோப்பையில் ஆசியாவின் உள்ள அணிகள் பலப்பரீட்சை நடந்துவதினால் உலக கோப்பைக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது இந்த தொடர்களின் மூலம் கிட்டத்தட்ட 5 முறை மோதிக்கொள்வதை பார்க்க வாய்ப்பு கிடைப்பதினால் சுவாரசியமானது விண்ணை தொட்டுள்ளது

இந்த நிலைமையில் சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அவர்கள் ஆசிய கோப்பை அணியை வெளியிட்டார். அப்போது பாகிஸ்தான் அணியில் உள்ள மிரட்டலான ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் “அவர்களை விராட் கோலி பார்த்துக் கொள்வார்” என்று சிரித்துக் கொண்டே அஜித் அகர்கர் பதிலளித்தார். அதாவது ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் துரத்தும் போது 4 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே இந்தியா திண்டாடியது. அப்போது பாண்டியாவுடன் இணைந்து மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 18வது ஓவரில் ஷாஹின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரிகளை அடித்து வெற்றிக்கு போராடினார்.

அதை விட உலகின் பாகிஸ்தானின் அதிவேக பவுலராக பார்க்கப்படும் ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்களில் நின்ற வாக்கில் நேராக உலகமே வியக்கும் அளவுக்கு அபாரமான சிக்சர் அடித்த விராட் கோலி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து மொத்தமாக 82* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அந்த வகையில் பாகிஸ்தான் பவுலர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் இம்முறை நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அஜித் அகர்கர் கலகலப்பாக அப்படி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீங்கள் என்ன தான் சிரித்தாலும் போட்டி நாளன்று யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பார்ப்போம் என அஜித் அகர்கருக்கு நட்சத்திர பாகிஸ்தான் வீரர் சடாப் கான் மறைமுகமான பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி ஆப்கானிஸ்தான் தொடருக்கு பின் அவர் பேசுகையில் “அவை அனைத்தும் போட்டி நடைபெறும் குறிப்பிட்ட நாளன்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்ததாகும். இப்போது இந்தியா அல்லது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். ஏனெனில் யார் என்ன சொன்னாலும் அது எங்களுடைய செயல்பாடுகளை பாதிக்கப் போவதில்லை. எனவே போட்டி நடைபெறும் போது என்ன நடக்கிறது என்பதை நாங்களும் பார்க்க தானே போகிறோம்” என்று கூறினார்.



