இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்த்திரரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது மிகவும் திறமையாக விளையாடியது குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், துல்லியமாக வீசும் திறமையை கொண்டிருக்கும் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அட்டாக்கை உலகத்தரம் வாய்ந்ததாக காட்டினார்கள். அதே போல அர்ஷிதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களும் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட இருக்கின்றனர்.
இப்படி சமீப காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சின் இந்த அபாரமான வளர்ச்சிக்கு காரணம் என்று ஒரு விஷயத்தை கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரரான அப்ரிடி. அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பேசுகையில் “இந்தியாவில் 1.4 பில்லியன் என்ற பெரிய மக்கள் தொகை இருக்கிறது. அதனால் தற்போது அவர்களுடைய விளையாட்டின் தரமும் மாறி வருகிறது.

ஆரம்ப காலங்களில் இந்தியா சிறந்த பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் சிறந்த பவுலர்களையும் உருவாக்குவதாக நாம் பேசினோம். ஆனால் அதற்காக இருவருமே நல்ல பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை சம அளவு உருவாக்கவில்லை என்று கூறிவிட முடியாது. இருந்த போதிலும் தற்போது இந்திய பவுலர்கள் இறைச்சிகளை உண்ண துவங்கியுள்ளனர். அதனாலேயே அவர்கள் அதிகப்படியான பலத்தையும் பெற்றுள்ளார்கள்.

அத்துடன் ஆரம்பத்தில் இந்திய அணியில் கங்குலி நிறைய மாற்றங்களை செய்த நிலையில் தோனி அதை அப்படியே முன்னோக்கி எடுத்துச் சென்றார். அதே போல பிசிசிஐ தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டை ராகுல் டிராவிட் போன்றவர்களை பயிற்சியாளர்களாக நியமித்து முன்னேற்றுவதற்கான சரியான முதலீடுகள் செய்துள்ளது”
அவர்களது உழைப்பால் தற்போது இந்தியா நல்ல திறமைகளை உருவாக்கி வருகிறது. ஆனால் தற்போது இந்தியா விரும்பினால் 2 அணிகளை விளையாட வைக்க முடியும். அதே போல இந்திய அணியினர் தற்போது பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் அப்ரிடி.



