மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் ஏற்கனவே உலக கோப்பை போட்டியில் ஓங்கு பெறுவதற்கான குவாலிபயர் தொடரில் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து அந்த சோகமான நிலைமையில் இருந்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் கடுமயாக முயற்சி செய்தது. அதன் முதல் படியாகத்தான் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடியது.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பெரும் தோல்வியை தழுவிய இந்தியா அந்த தொடரில் மிகவும் எளிமையாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டி நடந்தது. இதில் முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இரண்டாவது போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்றது. ஆனால் மூன்றவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும் தோல்வியை தழுவியது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேட்டி :
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “நான் எப்பொழுதுமே கூறுவது ஒன்றுதான் போட்டியின் சூழ்நிலையை கணித்து விளையாட வேண்டியது மியாகவும் அவசியமான ஓன்று. இந்திய அணியை நாங்கள் போட்டியின் இறுதி நேரத்தில் சுருட்டியதாக நினைக்கிறோம். ஆனால் அதனை தொடக்கத்தில் சரியாக செய்யவில்லை.

இருந்த போதிலும் இந்த மைதானத்தில் 350 ரன்கள் என்பது எங்களால் எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் இது எங்களுடைய நாள் கிடையாது. எப்பொழுது நாங்கள் விளையாட சென்றாலும் எங்களால் அந்த அணியை வாழ்த்தி வெற்றி பெற முடியும் என்றே எப்போதும் நினைப்போம்.அதேபோன்று எங்களது அணி வீரர்களிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் மற்றும் ஆட்டிடியூட் தேவையான ஒன்று.
ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் இதுதான் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்றார் ஷாய் ஹோப். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளை வரும் நாட்களில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டியானது நாளை தொடங்க இருக்கிறது.



