அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்தியாவில் அணியின் வீரர்களும் காயம் ஏற்படும் பிரச்னை என்பது மிகவும் மோசமான ஒன்றாக இருந்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் நம்பர் 4 இடத்தில் சரியாக பொருந்தி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால் யுவராஜ் சிங், ரெய்னா, கெளதம் கம்பீர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய பேட்டிங் வரிசையில் அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதும் மற்றொரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019 உலக கோப்பையை பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட்து. அதே போலத்தான் இந்திய அணியும் மிகச்சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ரோஹித் ஷர்மா 5 சதங்களை அந்த தொடரில் அடித்திருந்தார். ஆனால் அரையிறுதி போட்டியின் போது நியூசிலாந்து அணி இந்தியாவை மிகவும் எளிதாக வீழ்த்தியது. குறிப்பாக தொடக்க வீரர்களான விராட், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

எனவே தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்தால் முடிந்தது என்ற கருத்தை இந்தியா அப்போது நிரூபித்தது. மேலும் இந்த பிரச்னை அடுத்த உலா கோப்பையே வந்த நிலையிலும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நம்பர் 4 இடத்தில் தான் விராட் கோலியை களமிறக்க ஆசை பட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் “விராட் கோலி நான்காவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்றால், அவர் இந்திய அணியின் நலன் கருதி நான்காவது இடத்தில் பேட் செய்வார். உங்களுக்குத் தெரியும் நம்பர் 4 இடத்தில் சில பிரச்சனைகள் இருந்த நேரங்கள் உள்ளன. முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளிலும் கூட நான் 2019ஆம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்தபோது, தேர்வாளர் MSK பிரசாத் அவர்களிடம் விராட் கோலியை 4வது இடத்தில் களமிறக்க வைக்க விவாதிக்கலாம் என்று நினைத்தேன்.

உங்களுக்குத் தெரியும் ஏனென்றால் நான்கு இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தால் போட்டியே எங்களுடைய கட்டுப்பாட்டை விட்டு சென்று விடுகிறது. அது அப்போது நிதிப்பிக்கப்படது. மேலும் விராட் கோலியின் சாதனையைப் பார்த்தால் அவர் நான்காவது இடத்தில் களமிறங்க பொருத்தமான வீர்ர் என்று உங்களுக்கு தெரியும் என கூறினார் ரவி சாஸ்திரி.




