கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் முதல் போட்டியானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை தொடர்ந்து ஆக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை இந்தியா சென்னை மைத்தனத்தில் எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா மோதல் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் இந்தியா vs பாஸ்கிதான் போட்டி குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ஆனால் அந்த விடீயோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறூவனமானது நீக்கி விட்டது அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் அந்த பேட்டியில் பேசிய அவர் கூறுகையில் “எப்போதுமே இது போன்ற ஒரு சூழ்நிலை தான் உருவாகிறது. அதாவது நீங்கள் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் பாஸ்கிதான் அணியுடன் மற்றும் தோற்று விடாதீர்கள் என்று ( இதனை சொல்லி சிரிக்கிறார் ஷிகர் தவான்). ஆனால் உலக கோப்பை போட்டியை வெல்வதும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வருடம் கடவுளின் அருளால் கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்.
பாஸ்கிதான் அணியுடன் விளையாடுவது எப்போதுமே சுவாரசியத்தை கொடுக்க கூடியது. ஆனால் அது நேரத்தில் அழுத்தமும் இருக்கும். அவர்களுடன் விளையாடும் போது நிம்மதியான ஏதோ ஒரு உனர்வு போட்டியின் முடிவில் வரும். நான் இந்திய அணியில் இருக்கும் போது பாஸ்கிதான் அணியுடன் விளையாடும் போது அதிகபட்சம் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். மைத்தனத்தில் ரசிகர்களின் ஆராவாரம் ஆர்ப்பரிக்கும், ஆனால் அங்கேயும் அவர்களுடன் நாங்கள் நன்றாகவே பேசிக்கொள்வோம் என்றார் ஷிகர் தவான்.

இந்நிலையில் இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியாது இரண்டு வெற்றியை பதிவு செய்த நிலையில் இன்று மூன்றவது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் தோற்றது என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை டி20 தொடரில் வீழ்த்தும் என்பது குறிப்பிடதக்கது.




