அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் சில இளம் வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான் ஐ.சி.சி போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இருப்பினும் இந்த ஆண்டு ஐசிசி போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை

இவர் கடைசியாக டிசம்பர் 2022 இல் பங்களாதேசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதற்கு பிறகு இந்திய அணியின் தேர்வாளர்கள் சுப்மன் கில் மற்றும் இஷன் கிஷான் போன்ற இளைஞர்களுடன் விளையாடுவதினால் இவருக்கு வாய்ப்பு என்பது பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இளம் வீரர்கள் புதுவகையான ஷாட்டுகளை விளையாடுவது குறித்து பேசினார்.
அவர் கூறுகையில் “இளம் வீரர்கள் புதுவகையான ஷாட்டுகளை விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. மாற்றம் ஒன்றுதான் நம்முடைய வாழ்க்கையில் மாறாத ஓன்று. நீங்கள் காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். வீரர்கள் புதிய உத்திகள் மற்றும் புதிய சிந்தனை வழிகளைக் கொண்டு வந்ததைப் பார்ப்பது அழகாக இருக்கிறது. என்றார் ஷிகர் தவான்.
மேலும் பேசுகையில் “”நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். இருந்த போதிலும் இளம் வீரர்கள் சில புதிய ஷாட்களைக் கொண்டு வரும்போது அவர்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறோம். தனிப்பட்ட முறையில் நீங்கள் அதை எப்படி விளையாடினீர்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியாயம் தரும் ஒரு கேள்வியாக இருக்கிறது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் துணிச்சலான ஷாட்களில் ஒன்றாக அறியப்பட்டவர். ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் பந்தில் சிக்ஸருடன் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கிய சூரியகுமார் யாதவ் தற்போது இந்திய அணியின் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒரு பகுதியாக மாறியுள்ளார். மேலும் தவான் ஒருமுறை சூரியகுமாரிடம் ஒரு ஷாட்டை கற்றுக்கொண்டது பற்றி பேசினார்.
நான் சூரிய குமார் யாதவ் அடித்த ஷாட் பற்றி கேட்டேன். எப்படி அதை செய்தீர்கள் என்று. அதற்கு சூரியகுமார் பதிலளித்தார். நானா வளைத்து பின்னர் இது போன்ற ஷாட்டுகளை அடிப்பதாக கூறினார். அதற்கு நான் கூறினேன் வலைகளிலும் அதை முயற்சிக்கப் போகிறேன் என்று. ஏனென்றால் அதிக விளையாடும் ஷாட்டுகளை விளையாடுவது நல்ல மனநிலையை தருகிறது என்றார் ஷிக்கர் தவான்.




