தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி இந்த உலகக் கோப்பை போட்டியாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளின் இழந்து 270 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக ஷகீல் 52 ரண்களும் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்ளும் சாதாப் கான் 43 ரன்களையும் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கோட்ஸி இரண்டு விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தார். 271 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக தொடக்கம் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி ஓவர்களில் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக ஏடன் மார்க்ரம் 68 ரன்களும் டேவிட் மில்லர் 29 ரன்களும் கேப்டன் பவுமா 28 ரண்களையும் அடித்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் இரண்டு விக்கெட் களையும் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் உஸ்மானிர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது இதே போல் இருந்தால் இந்த உலக கோப்பை அரை இறுதியில் வருவது சந்தேகம் என்றும் பலரும் பாகிஸ்தானை விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டியில் அம்பையரின் முடிவுகள் சில சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில் இது ஒரு சிறப்பான செயல்பாடு. அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை காட்டி சிறப்பாக பந்து பந்து வீசி வந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற தான் அவர்கள் உண்மையில் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

பாகிஸ்தான் அணி நிறைய டாட் பந்துக்களை விளையாடியது. பவர் ப்ளேவில் பேட்ஸ்மேன் நிறைய நேரம் எடுத்து எடுத்தனர். ஷாகின் வந்து வீசும்போது ஸ்லீப் இருந்திருக்க வேண்டும். அட்டாக் செய்யும் வகையில் அமைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் கூறியவர் ஆனாலும் கூட அணி நன்றாகவே செயல்பட்டது. என் இதயம் என் அணியின் பக்கமாக சாய்கிறது ஆனாலும் இந்த நேரத்தில் அவர்கள் 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



