க்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் உலக கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பை துவங்க இன்னும் 2 மாதம் கூட இல்லாத நிலைமையில் மாற்றங்கள் என்ற பெயரில் சோதனைகளை செய்து வரும் இந்தியா நிலையான 11 பேர் அணியை உருவாக்குவதில் தடுமாறி வருவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இதனால் கேப்டன்கள் மற்றும் வீரர்களை அடிக்கடி மாற்றுவது போன்ற குளறுபடிகளை செய்து தங்களை தாங்களே இந்தியா அளித்துக்கொள்கிறது என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவரும் நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “மகாபாரதம் போல இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் மீது நிறைய அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இது கண்ணுக்கு தெரியாத அழுத்தமாகும். ஏனெனில் அவர்கள் பாகிஸ்தானை எளிதாக இந்தியா தோற்கடிக்கும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தான் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகப் போகிறது. ஏனெனில் அவர்கள் இந்தியாவை இப்போதே வெற்றியாளராக கொண்டாடுகின்றனர்
அதன் காரணமாக பாகிஸ்தான் மீது எந்த அழுத்தமுமில்லை. ஏனெனில் ஊடகங்கள் பாகிஸ்தான் தோற்பதை எதிர்பார்க்கின்றன. எனவே பாகிஸ்தான் பயமின்றி விளையாடினால் இந்த உலகக் கோப்பையை வெல்லலாம். குறிப்பாக இந்தியாவில் 50,000 பேருக்கும் குறைவாக உட்காரும் மைதானங்களே இல்லை. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதை 2 பில்லியன் மக்கள் பார்ப்பார்கள்”

எனவே பெரிய மாற்றங்களை செய்யாமல் முழு தன்னம்பிக்கைடன் இத்தொடர் முழுவதும் விளையாடினால் பாகிஸ்தான் அணியால் சாதிக்க முடியும். குறிப்பாக 2023 உலக கோப்பையை அகமதாபாத் மைதானத்தில் வென்று இந்தியாவை 2011 உலக கோப்பை தோல்விக்கு பாகிஸ்தான் பழி தீர்க்கும். அதை இப்போதே எங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்



