மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதனால் பலரும் இந்திய அணியின் இந்த பர்மிற்கு விமர்சனம் செய்தார்கள்.

இந்நிலையில் மூன்றவது டெஸ்ட் போட்டியானது பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று அவர்களுக்கு பின்னர் தான் தெரிய வந்தது. ஏனென்றால் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்.
குறிப்பாக இஷான் கிஷான் 77(64) ரன்களில் ஆட்டமிழக்க அவரோடு கைகோர்த்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சுப்மன் கில் சதம் அடிக்காமலேயே 85 (95) எடுத்தார். இது அவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருத்தது. இந்நிலையில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில்லை தொடர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக விளையாட இந்தியா 351 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்லிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பேசிய போது இந்த இன்னிங்ஸ் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. நான் இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.

அதோடு துவக்கத்தில் பந்து நன்றாக பேட்டுக்கு வந்ததால் நல்ல ஷாட்களை விளையாட முடிந்தது.ஆனால் பந்து சற்று பழையதாக ஆன பிறகு சற்று சவாலாக இருந்தது. கடந்த போட்டியின் போது நான் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். இந்த போட்டியில் என்னுடைய பெஸ்ட்டை வழங்கியதாகவே நான் நினைக்கிறேன் என்று கூறினார் சுப்மன் கில்.
இந்நிலையில் இந்தியாவை தவிர மற்ற வெளிநாடுகளில் சுப்மன் கில் ஆட்டம் பெரிதாக இருக்காது என்று பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சுப்மன் கில். மேலும் நாளை தொடங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா டி20 தொடரிலும் சுப்மன் கில் இருப்பதினால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




