கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
அந்த போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி பாகிஸ்தான் அணயின் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களாகிய சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். இருந்த போதிலும் பின்னர் வந்த ஹர்திக் மற்றும் இஷான் கிஷான் நிலையான ஆத்தி வெளிப்படுத்தினாலும் மழை காரணமாக போட்டியானது தடைபட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியான நிலையில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. மேலும் இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. இப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் திறமையான பந்துவீச்சுகு முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறுவது குறித்து பேசியுள்ளார் சுப்மன் கில்.

அவர் கூறுகையில் “சர்வதேச அளவில் நீங்கள் விளையாடும் போது நிறைய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை உங்களுடைய கேரியரின் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்கனவே விளையாடி இருப்பார்கள். ஆனால் உலகின் மற்ற அணிகளை காட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் அதிகமாக விளையாடுவதில்லை. அவர்களிடம் நல்ல பவுலிங் அட்டாக் இருக்கிறது. எனவே அவர்களைப் போன்ற தரமான பவுலர்களை அடிக்கடி நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்றால் திடீரென்று ஒருநாள் விளையாடும் போது பெரிய வித்தியாசம் ஏற்படலாம்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்னை காரணமாக பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு தொடர்களில் மோத வில்லை. மேலும் பாகிஸ்தான் பவுலர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படாததால் அவர்களை அடிக்கடி எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் 6 மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை திடீரென அவர்களை சந்திக்கும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக சுப்மன் கில் கூறியுள்ளார்.



