உலக கோப்பை உலக கோப்பை 2023 தொடரின் இறுதி கட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று இந்தியா vs நியூசிலாந்து போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி உலக கோப்பை 2023 இறுதி போட்டிக்கு செல்லும். ஆனால் பலரது ஒரு பயமே அரையிறுதி போட்டிதான். ஏனென்றால் கடந்த 2019 உலக கோப்பை போட்டியிலும் இந்தியா அணி நியூசிலாந்து அணியை ஏந்திக்கொண்டு யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சோகமான தோல்வியை தழுவியது.

மேலும் அதில் தோனி அவுட் ஆனதை இன்னமும் யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் அந்த மாதிரியான சூழ்நிலை இந்த நேரத்தில் ஏற்பட கூடாது என்று பலரும் வெடிகொள்கின்றனர். அதே நேரத்தில் அப்போது இருந்த அணி வேறு இப்போது இருந்த அணி வேறு என்பதினால் இந்த முறை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்பார்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்தியா தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்று வருவதினாலும், இந்த போட்டியில் டாஸை வென்று பேட்டிங் செய்து வருவதினால் இந்தியாவே வெற்றி பெரும் என்று பலரும் கூறிவரும் நிலையில் தான் இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டால் நியூசிலாந்து வெற்றி பெற ஒரு வழி தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “நியூசிலாந்தின் பார்வையில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்வது முக்கியம். எனவே டாஸ் வெல்வது இரு தரப்புக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மும்பையில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த வழி என்பதை நாங்கள் பார்த்தோம். நியூசிலாந்தின் பார்வையில் 300 ரன்கள் இலக்கை நிர்ணயித்து நன்றாகப் பந்துவீசி, இந்தியாவைச் சற்று அழுத்தத்திற்கு உள்ளாக்கினால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியால் வெல்ல முடியும் என்றார் சைமன்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “கடந்த 12 ஆண்டுகளில் நாக் அவுட் போட்டிகளில் என்ன நடந்தது என்பதை எந்த இந்திய ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் தற்போது இந்தியா அரையிறுதி போட்டியில் சிறந்த அணியாக செல்கிறார்கள். நியூசிலாந்து அணி இப்போஇதுதான் இந்தியாவின் பலவீனங்களை கண்டுபிடிக்கிறது. மேலும் நியூசிலாந்து இந்தியாவை எதிர்க்க அணியாக விளையாடுது முக்கியம் என்று கண்டுபிடித்துள்ளது என கூறியுள்ளார் சைமன்.




