உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இந்தியா தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுவதினால் அங்குள்ள காலநிலை, சூழ்நிலை, ஆடுகளத்தில் தன்மை என அனைத்திலும் தரவாக இருப்பதினால் இந்தியாவுக்கே வெற்றி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பைனல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “இந்தியாவின் தற்போதைய ஆட்டம் வெறித்தனமாக இருந்து வருகிறது, அஹமதாபாத்திற்கு சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியது. இந்திய அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியும் ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பை கோப்பைக்கும் இடையில் நிற்கிறது.
இந்திய அணி இந்த தொடர் முழுவதும் விளையாடியது போல இறுதி போட்டியில் செயல்பட்டார்கள் என்றார் அவர்களை தடுப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கடினமாக இருக்கும். ஆஸ்திரேலியாவும் ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கங்குலி. இந்நிலையில் நாளை நடக்க இருக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று பலரும் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



