கிரிக்கெட் உலகில் இந்திய அணியானது பலமான ஒரு அணியாக இருந்தாலும் கூட தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பல போட்டிகளை இந்தியா இழந்துள்ளது. சொல்லப்போனால் கடந்த 2019 உலக கோப்பை அப்படிதான் இந்தியா சொதப்பியது. கோலி, ரோஹித், கேஎல் ராகுல உள்ளிட்டோர் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த பிரச்னையை விடமும் நம்பர் 4 இடத்தில் களமிறங்குவது யார் என்ற பிரச்னை நீடித்து வருகிறது.

ஏனென்றால் தொடக்க வீரர்கள் சரியும் போதெல்லாம் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்துவதை கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் ரன்கள் தேவைப்படும் போது அதிரடியாக ஆடவும் சரியான வீரர் தேவை. இந்நிலையில் முன்னர் இருந்த சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் சென்ற பின்னர் அவர்களின் இடத்திற்கு சரியான ஆளாக ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக வெளியேறி தற்போது குணமடைந்து வரும் நிலையில் தான் வரும் உலக கோப்பையில் யார் நம்பர் 4 இடத்தில் களமீறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் முன்னல் இந்திய அணியின் தேர்வாளர் கங்குலி இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” எங்களிடம் நம்பர் 4 இல்லை என்று யார் சொன்னது? அந்த இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய பல பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர். நான் வித்தியாசமாக நினைக்கிறேன், எனது மனநிலை வேறு. இது ஒரு அற்புதமான பக்கம். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைவருமே அனைத்து இடங்களிலும் விளையாடும் அனுபவத்தை கொண்டுள்ளவர்கள்.

மேலும் அனைத்து நேரங்களிலும் நமக்கு அனுபவமும் முக்கியம் கிடையாது. திலக் வர்மாவை ஒரு இடது கை ஆட்டக்காரராக நான் பார்க்கிறேன். நல்ல திறமையான இளம் வீரரான அவர் இதுவரை பெரிய அளவில் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமல்ல. அதே போல ஆர்டரின் மேல் பக்கத்தில் விளையாடும் தகுதியை கொண்டவர் ஜெய்ஸ்வால் . எனவே ராகுல் டிராவிட், ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழுவினருக்கு தேர்வு செய்வதற்காக நிறைய வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் திலக் வர்மா நல்ல தேர்வாக இருப்பார். நல்ல திறமையான இளம் வீரரான அவர் இதுவரை பெரிய அளவில் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமல்ல. இஷான் கிஷான் போன்ற அனுபவங்கள் இல்லாதவர்கள் குழுவாக இருக்க வேண்டும். அதே போல ஜெயிஸ்வால் டாப் ஆர்டரில் விளையாடும் தகுதியை கொண்டவர்.

மேலும் இந்த உலகக் கோப்பையில் டாப் அணிகளை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா எப்படியும் வந்து விடுவார்கள். இங்கிலாந்து வலுவான அணியை கொண்டுள்ளது. அதே போல இந்தியா மற்றும் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு நிகராக நியூஸிலாந்தும் இது போன்ற பெரிய தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் அணியாகும் என்றார் கங்குலி.



