கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது.இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான கங்குலி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “இது ஒரு பெரிய விளையாட்டு. முன்பு இருந்தது மேலும் அது அப்படியே இருக்கும். உலகக் கோப்பையின் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இந்தியா ஆஸ்திரேலியா, இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டிகளைப் போலவே நான் அதை பார்த்தேன். நீங்கள் விளையாடுவது சிவப்புப் பந்தாக இருந்தாலும் சரி அல்லது வெள்ளைப் பந்துதாக இருந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வந்து என்னை அப்படித் தயார்படுத்திக் கொண்டேன்.

இது நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் கவனம் இழக்க நேரிடும். உங்களை சரியான வழியில் தயார் படுத்தினால் அழுத்தம் என்பது இருக்காது. அழுத்தத்தை இப்படித்தான் கையாள வேண்டும். சிலரால் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் சிலரால் அது முடியாது. நான் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறந்த சாதனையைப் பெற்றிருந்தோம், ஆனால் இந்த முறை அது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஆட்டமாக இருக்கும்.
கடந்த ஆண்டு துபாயில் இந்தியாவை பாகிஸ்தான் வென்ற பிறகு நிலைமை மாறியது. பாகிஸ்தானும் ஒரு நல்ல அணி மற்றும் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட அசாதாரண திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்தியா விளையாடுவது, அகமதாபாத்தில் இந்தியா விளையாடுவது மற்றும் 110,000 ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவது மிகவும் வித்தியாசமான விஷயம்.

இந்தியாவிற்கு இந்த உலக கோபப்பியில் சில சாதகம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகக் கோப்பை 50 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் போது நன்றாக விளையாட வேண்டும். இந்தியாவில் சில சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், மேலும் சில சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், எனவே அது அன்றைய தினம் செயல்படுத்தப்படுவதைப் பொறுத்தது என்றார் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி



