அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுவாகவே பாகிஸ்தான் அணியிடம் ரோஹித் மற்றும் விராட் இருவரும் கொஞ்சம் திணறுவார்கள் என்று கூறுவார்கள். சொல்லப்போனால் கடந்த 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் முகமது அமீர், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட், 2021 டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் சாகின் அப்ரிடி என அழுத்தமான போட்டிகளில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திண்டாடினார்கள்.

இது தற்போதும் ஒரு பிரச்னையாக பார்ப்பக்படுகிறது. குறிப்பாக வரும் 2023 உலகக் கோப்பை தொடரானது முழுக்க முழுக்க சொந்த மண்ணில் நடைபெறுவதினால் இந்தியா கடந்த 2011 உலக கோப்பை போட்டி போல வெல்லுமா என்ற கவலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மீண்டும் வலுவாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து பேசியுள்ளார் ஸ்ரீசாந்த்.

அவர் கூறுகையில் “அது இந்தியாவுக்கு துரதிஷ்ட வசமாக நடந்தது. குறிப்பாக இன்சைட் எட்ஜ் முறையில் விராட் கோலியின் விக்கெட்டை பாகிஸ்தான் அதிர்ஷ்டவசத்தால் பெற்றது. எனவே இதை ஒரு விக்கெட்டாகவே நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். மேலும் விராட் கோலியை பற்றி நன்கு தெரிந்த எனக்கு தம்முடைய விக்கெட்டை சாய்த்து பாகிஸ்தான் கொண்டாடிய போது அவர் என்ன நினைத்திருப்பார் என்பதும் தெரியும். அதனால் அடுத்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக நான் காத்திருக்கிறேன்.
அதே போல எப்போதுமே இடது கை பவுலர்களுக்கு எதிராக ரோகித் சர்மா தடுமாறுகிறார் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அனைத்தும் சாதகமாக நடக்கும். அப்போட்டியில் அவரும் விராட் கோலியும் நல்ல துவக்கத்தை பெற்றனர். குறிப்பாக விராட் கோலி அடித்த கவர் ட்ரைவை பார்த்த போது அவர் சதமடிப்பார் என்று எனக்கு தோன்றியது. எனவே அடுத்த போட்டியில் இடது கை பவுலர்களை அவர்கள் எவ்வாறு அடித்து நொறுக்குகிறார்கள் என்பதை காத்திருந்து பாருங்கள் என்றார் ஸ்ரீசாந்த்.




