உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப்பை பெற்றுவிட்டனர். அதில் இந்திய அணி ஏற்கனவே நடந்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது

மேலும் அதற்கு அடுத்த படியாக பலமான அணிகளாக தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் இறுகின்றனர். மேலும் தொடந்து சில தோல்விகளை தழுவிய பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் கொஞ்சம் மோசமான கட்டத்தில் இறுகின்றனர். இதனால் வரும் போட்டிகளை அவர்கள் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருகின்றனர்.
இதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது நடப்பு சாம்பியன் அணியானது இங்கிலந்து அணி தான் ஏனென்றால் இங்கிலாந்து 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோத இருக்கும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “நீங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு பிறகு இந்தியா அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும், அவ்வளவுதான். அதனை தவிர்த்து அதிக தூரம் யோசிக்க வேண்டாம்.சேசிங் நீங்கள் வெற்றிபெற விரும்பும் வழி என்றால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள். இன்னும் நாக் அவுட் நிலை பற்றி கவலைப்பட வேண்டாம். இங்கிலாந்து அணியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம். எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
மேலும் இங்கிலாந்து அணியின் நிலைமை குறித்து பேசிய கவாஸ்கர் கூறுகையில் “ஓப்பனிங் சரியாக இங்கிலாந்து தொடங்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் போராடி வரும் அனைத்து அணிகளையும் பார்த்தால், எந்த அணியும் நல்ல தொடக்கத்தை பெறவில்லை. முதல் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அவர்களின் மற்ற பேட்டர்கள் உள்ளே வந்து மிடில் ஓவர்களில் வீசுவதற்கு அவர்களுக்கு ஒரு தளம் கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பேட்டிங்கிலும் பந்துவீச்சில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை ஏற்றார் கவாஸ்கர்.




