உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியான முடிவை எடுத்ததார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்துள்ளது. 398 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி இருந்தாலும் அதன் மிட்சல் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இருப்பினும் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்களை மட்டுமே அடித்து ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆடுகளம் திடீரென மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து ஐசிசி விளக்கமும் கொடுத்திருந்தது.
அதாவது வான்கடே மைதானத்தில் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அங்குள்ள ஐசிசி அதிகாரியின் சம்மதத்துடன் ஆடுகளம் மாற்றப்பட்டதாக தெரிவித்தது. இருந்த போதிலும் பலர் இது இன்டனியாவின் சதி என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் இது குறித்து நியூசிலாந்து அணி தரப்பில் இருந்து எந்த புகாரும் எழுப்பப்படவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “இது பேட்டிங் செய்ய மிகவும் நல்ல பிட்ச். நாங்கள் இங்கு கிட்டத்தட்ட 730 ரன்கள் எடுத்துள்ளோம். ஆடுகளம் மாற்றப்பட்டது மற்றும் இது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பேசும் முட்டாள்கள் அனைவரும், அவர்கள் வாயை மூடிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியாவிலும் இதனை பேசுவதை நிறுத்த வேண்டும். ஆடுகளம் மாற்றப்பட்டாலும், இரு அணிகளுக்கும் டாஸ் போடுவதற்கு முன்பே இருந்தது. நடுப்பகுதியில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் முடிந்த பிறகும் மாற்றப்படவில்லை. இரு அணிகளுக்கும் பிட்ச் ஒரே மாதிரியாக இருந்தது. நீங்கள் போதுமான நல்ல அணி, நீங்கள் அந்த ஆடுகளத்தில் விளையாடி வெற்றி பெறுவீர்கள். இந்தியா அதைச் செய்துவிட்டது. எனவே ஆடுகளங்களைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். அவர்கள் ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள ஆடுகளத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரண்டாவதுஇறுதிப் போட்டி கூட நடக்கவில்லை, அதற்குள் அகமதாபாத்தில் ஆடுகளம் மாற்றப்படுவதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், ”என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.



