உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இந்தியா பந்துவீச்சாளர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் விராட் கோலி அடித்த அந்த சதம் மியாகவும் முக்கியமானது. மேலும் விராட் கோலி அந்த சதத்தின் மூலம் 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். மறுபுறம் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இறுகின்றனர். ‘
குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் காயம் முடிந்து இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்து கொஞ்சம் தடுமாறி வருகிறார். மேலும் நேற்று வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் கூட 25 பந்துகள் விளையாடி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பலரும் இவரின் மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “ஸ்ரேயாஸ் ஐயர் பொறுமை இழந்த அவர் 19 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் தனது விக்கெட்டைத் பந்துவீச்சாளரிடம் தூக்கி எறிந்தார். சுப்மான் கில் பேட்டிங்கில் ஐம்பது 53 ரன்களை அடித்த பிறகு அவரது விக்கெட்டைத் தூக்கி எறிந்தார். இப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி சதத்தைப் பெருவது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு முக்கியமானது. சுப்மான் கில் குறைந்தபட்சம் சதங்கள் பெறுகிறார், ஷ்ரேயாஸ் ஐயர் சதங்களைப் எடுப்பதே இல்லை. இது போன்ற நல்ல ஆடுகளங்களில் 4-வது இடத்தில் பேட் செய்யும் பொன்னான வாய்ப்களையும் சுலபமாக ரன்களை அடிக்க கூடிய எதிரணியை வைத்துக்கொண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தூக்கி எறிகிறார்.

ஆனால் விராட் கோலி அதை ஒருபோதும் செய்வதில்லை. கோலி எப்போதாவது தனது விக்கெட்டை இழப்பார். அவர் உங்களை தனது விக்கெட்டை பெறுவதற்கு பெருமை படும் அளவிற்கு செய்வார். அதுவே உங்களுக்குத் தேவையானது. அவர் 70-80க்கு வந்தபோது, நூற்றுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதை உணர்ந்து பொறுமையாக விளையாடி சதம் அடித்தார். ஏனென்றால் தினமும் உங்களுக்கு சதம் அடிக்கின்ற வாய்ப்பு வருவதில்லை என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.



